நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. மாரி செல்வராஜின் பைசன் படத்தை வாழ்த்திய அண்ணாமலை!
K Annamalai Praises Bison: தமிழில் கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் பைசன். இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க, துருவ் விக்ரம் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இப்படமானது உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை வாழ்த்தி பாஜக நிர்வாகி அண்ணாமலை எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும், மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் இயக்கிய 5வது படம்தான் பைசன் (Bison). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படமானது தென் மாவட்டத்தில் பிரபல கபடி வீரரான மணத்தி கணேசனின் (Manathi Ganesan) கபடி வாழ்க்கை, அதை சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் சமூக பிரச்சனையை அடிப்படையாக கொண்டு இந்த படமானது உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்த பைசன் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் (Rajinikanth) இப்படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். இந்நிலையில் தமிழக பாஜக நிர்வாகி கே அண்ணாமலையும் (K. Annamalai), இந்த பைசன் திரைப்படத்தை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், பைசன் திரைப்படத்தின் கதைக்களம், மாரி செல்வராஜின் கதை சொல்லல் மற்றும் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பு குறித்த புகழ்ந்துபேசியுள்ளார்.




இதையும் படிங்க: சீதா ராமன் பட இயக்குநருடன் கூட்டணி… பிரபாஸின் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது!
பைசன் குறித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவு
அன்புச் சகோதரர் திரு @mari_selvaraj அவர்கள் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்… pic.twitter.com/nRumcGQbnd
— K.Annamalai (@annamalai_k) October 23, 2025
இந்த பதிவில் அண்ணாமலை, “மாரி செல்வராஜின் இந்த பைசன் படத்தைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டதாகவும், இந்த படத்தின் கதை மிகவும் அருமையாக அமைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேஷனையும் வாழ்த்தியுள்ளார். மேலும் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பு குறித்தும், அவர் இந்த படத்திற்காக தன்னையே அர்பணித்துள்ளார் என்பது பற்றியும் பேசியுள்ளார். மேலும் இந்த பைசன் படமானது வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
பைசன் திரைப்படத்தை வாழ்த்திய பிரபலங்கள்
மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரமின் கூட்டணியில் வெளியான இந்த பைசன் படமானது, கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கும் மேலாக உருவாகிவந்தது என்றே கூறலாம். இந்த படமானது முற்றிலும் கபடி, சமூகம் மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்
இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சந்தோஷ் நாராயணன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பல்வேறு பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.