Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gandhi Talks: விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமியின் ‘காந்தி டால்க்ஸ்’ சைலன்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Gandhi Talks Movie X Reviews: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாக இருப்பவர்கள் அரவிந்த் சுவாமி மற்றும் விஜய் சேதுபதி. இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள மௌன திரைப்படம்தான் காந்தி டால்க்ஸ். இப்படம் இன்று 2026 ஜனவரி 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கான எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Gandhi Talks: விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமியின் ‘காந்தி டால்க்ஸ்’ சைலன்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
காந்தி டாக்ஸ் திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Jan 2026 13:15 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னே தயாராகியிருந்த திரைப்படம்தான் காந்தி டால்க்ஸ் (Gandhi Talks). இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி (Arvind Swamy), அதிதி ராவ் (Aditi Rao) உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை பிரபல மராத்தி இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishore Pandurang Belekar) இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் இயக்க, ஜீ ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rhman) இசையமைத்துள்ளார். இந்த காந்தி டால்க்ஸ் திரைப்படமானது முழுக்க மௌன திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வசனங்கள் எதுவும் இல்லாமல், முழுவதுமாக ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் தயாராகியுள்ளது.

இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே வெளியாகவிருந்த நிலையில், சில சிக்கல்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சங்கள் இருந்துவரும் நிலையில், இதன் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமியின் காந்தி டால்க்ஸ் பட எக்ஸ் விமர்சனங்கள்:

இந்த காந்தி டால்க்ஸ் படமானது முழுக்க மௌன திரைப்படமாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தில் எமோஷனல், காமெடி மற்றும் நல்ல தகவலை கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த படமானது சினிமாவின் ஒரு திருப்பமாக அமைந்துள்ளதால் கூறப்படுகிறது.

காந்தி டால்க்ஸ் படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி உள்ளது :

இப்படத்தில் விஜய் சேதுபதி வேலையை தேடி அலையும் ஒரு சாதாரண இளைஞனாக நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி மிகப்பெரிய பிஸ்னஸ் மேன்- ஆக நடித்துள்ளார் மேலும் நடிகை அதிதி ராவ் காதலில் ஆர்வமாக உள்ள ஒரு பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது மொத்தமாக பணத்தை சுற்றி நடக்கும் ஒரு கதையை மையமாக கொண்டுள்ளது. மேலும் இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான் இப்படத்திற்கே உயிரையே கொடுக்கிறதாம். படம் முழுக்க அவரின் இசியால நிறமியுள்ளதாக கூறபடுகிறது.

இதையும் படிங்க: எனது அடுத்த திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்த விஷயம்!

காந்தி டால்க்ஸ் படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா:

பணமும் ஊழலும் எவ்வாறு பணக்காரர்களையும் ஏழைகளையும் பாதிக்கின்றன என்பது இந்த காந்தி டால்க்ஸ் படத்தின் ஒன் லைன் ஸ்டோரியாகும். ஊழல் நிறைந்த அமைப்பைக் கையாள இரண்டு வழிகளைப் பற்றி படம் பேச முயற்சிக்கிறது. முன்னணி நடிகர்களின் நடிப்பு, முக்கிய கருத்து படத்தை அழகாக காட்டியுள்ளதாம். நிச்சயமாக ஒருமுறையாவது திரையரங்கு சென்று பார்க்கும் அளவிற்கு இந்த காந்தி டால்க்ஸ் படம் அருமையான் படம் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இணையத்தில் 5-க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கப்படுகிறது.