சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்
Parasakthi Movie: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்து வந்தாலும் மற்ற நாயகன்களின் படங்களுக்கு இசையமைக்கும் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது பராசக்தி படத்தின் பாடல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டையும் வெற்றிகரமாக செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜிவி பிரகாஷ் குமார் தற்போது நாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் இசையில் வெளியாகும் பாடல்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியாக சினிமாவில் நாயகனாக நடித்தாலும் தனது இசை பணியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து அதனையும் செய்து வருகின்றார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது இசைக்காக பல விருதுகளைப் பெற்று இருந்தாலும் சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை இரண்டாவது முறையாக பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி படத்தில் இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷ் குமாருக்கு தற்போது தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்னதாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வெளியான சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்ததற்காக முதன் முறையாக ஜிவி பிரகாஷ் குமார் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா இருவரும் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கதில் பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஷூட்டிங் ஓவர்… அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட பராசக்தி படக்குழு
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Parasakthi songs soon 🔥🔥🔥 … SP combo is onway 🔥 @Sudha_Kongara @Siva_Kartikeyan @iam_RaviMohan @DawnPicturesOff @saregamasouth
— G.V.Prakash Kumar (@gvprakash) October 23, 2025
Also Read… கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!