Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்

GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் மயக்கம் என்ன படத்தின் பாடல் உருவான விதம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பேசியது வைரலாகி வருகின்றது.

நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
செல்வராகவன், ஜிவி பிரகாஷ் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2025 21:35 PM IST

இயக்குநர் செல்வராகவன் (Director Selvaraghavan) இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மயக்கம் என்ன. சைக்காலஜி ட்ராமாவாக உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுந்தர் ராமு, மதிவாணன் ராஜேந்திரன், ஜாரா பாரிங், ரவிபிரகாஷ், ஷில்பி கிரண், ராஜீவ் சௌத்ரி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஓம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் தினேஷ்குமார், ஈஸ்வரமூர்த்தி, மனோகர் பிரசாத், ரவிசங்கர் பிரசாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நா சொன்னதும் மழை வந்துச்சா பாடல் எப்படி உருவானது என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கர்ணன் படத்துல அந்த ஒரு ஷாட்தான் நாம் ரொம்ப எஞ்சாய் பண்ணேன் – இயக்குநர் மாரி செல்வராஜ்!

விக்ரம் படத்திற்காக இசையமைத்த பாடல் தனுஷ் படத்தில் யூஸ் பண்ணினோம்:

அதன்படி அந்தப் பேட்டியில் ஜிவி பிரகாஷ் குமார் பேசியதாவது, செல்வராகவன் மற்றும் விக்ரம் இணைந்து சிந்துபாத் என்ற படம் செய்ய வேண்டி இருந்தது. அந்தப் படத்திற்காக இசையமைத்த பாடல்தான் நான் சொன்னதும் மழை வந்துச்சா. ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்ற உடன் இந்தப் பாடலை செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திற்கு பயன்படுத்தினோம் என்று தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வாகை சூட வா படத்தில் கலர் தியரி இப்படி இருக்கும் – இயக்குநர் சர்குணம் ஓபன் டாக்