Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SJ Suryah: கில்லர் படம் இப்படித்தான் இருக்கும்.. எஸ்.ஜே.சூர்யா அப்டேட்!

SJ Suryah About Killer Movie: தமிழ் பிரபல நட்சத்திர நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குநராக சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நாயகனாகவும் நடித்துவருகிறார். இவர் பல வருடங்களுக்கு பின் தற்போது இயக்கவுள்ள படம்தான் கில்லர். இந்த படத்தின் கதை பற்றி எஸ்.ஜே.சூர்யா வெளிப்படையாக பேசியுள்ளார்.

SJ Suryah: கில்லர் படம் இப்படித்தான் இருக்கும்.. எஸ்.ஜே.சூர்யா அப்டேட்!
எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Oct 2025 11:26 AM IST

கோலிவுட் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு மொழியிலும் தனது நடிப்பின் மூலம் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryah). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்ககள் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் (Veera Dheera Sooran). நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) முன்னணி நடிப்பில், கடந்த 2025 மார்ச் மாதத்தில் இந்த படமானது வெளியானது. இந்த திரைப்படத்தில் அசத்தல் போலீஸ் அதிகாரியாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு திரைப்படங்களும் வெளியாகவில்லை.

அந்த வகையில் தற்போது நடிகராக இருந்துவரும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். அந்த ஹீரோவாகவும் நடிப்பதாக அறிவித்திருந்தார். அந்த திரைப்படம் தான் கில்லர் (Killer). இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஜே. சூர்யா கலந்துகொண்டார். அதில் அவர் இந்த படம் எதை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மிஷ்கினின் கூட்டணி.. இயக்குநருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

கில்லர் திரைப்படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய எஸ்.ஜே.சூர்யாவிடம், கில்லர் படத்தில் ஒரு கார் இருக்கிறதே அதை வைத்துதான் முழு கதையா? என கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா, “இந்த கில்லர் திரைப்படத்தில் இந்த காரும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதில் அந்த காரும் ஒரு கதாபாத்திரம் போலத்தான். மேலும் நிறைய விஷயங்கள் இந்த திரைப்படத்தை பற்றி பிறகு பேசலாம்” என அந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பென்ஸ்’ திரைப்படத்தின் ஷூட்ங்கில் மீண்டும் இணைந்த நிவின் பாலி.. வைரலாகும் பதிவு!

கில்லர் திரைப்படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த பதிவு :

இந்த கில்லர் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடிக்கும் நிலையில், கோகுலம் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. மேலும் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முன்னணி ஹீரோவாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக அயோத்தி, மற்றும் கிஸ் போன்ற படங்களில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.