Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arasan: வடசென்னை பாணி.. ரசிகர்களை கவர்ந்த சிலம்பரசனின் அரசன் ப்ரோமோ வீடியோ!

Arasan Movie Promo Video:தமிழில் பிரபல முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் முன்னணி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவரும் படம் தான் அரசன். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

Arasan: வடசென்னை பாணி.. ரசிகர்களை கவர்ந்த சிலம்பரசனின் அரசன் ப்ரோமோ வீடியோ!
அரசன் பட ப்ரோமோ வீடியோ
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Oct 2025 11:05 AM IST

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் அரசன் (Arasan). இந்த படத்தில் சிலம்பரசன் அதிரடி நாயகனாக நடிக்க, இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கவுள்ளார். விஜய் சேதுபதியின் விடுதலை பார்ட் 2 படத்திற்கு பின் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் (Vaadivaasal) திரைப்படத்தின் இயக்கவுள்ளதாக கூறிய நிலையில், ஸ்கிரிப்ட் பிரச்சனையின் காரணமாக தற்காலிகமாக அந்த திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாகதான் வெற்றிமாறன், சிலம்பரசனை வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த படம் ஆரம்பத்தில் STR49 என அழைக்கப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அரசன் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசன் திரைப்படமானது, தனுஷின் (Dhanush) வட சென்னை (Vada Chennai) திரைப்படத்தின் பின்னணி கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாம்.

இதை வெற்றிமாறனே அறிவித்திருந்தார் நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்று 2025 அக்டோபர் 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் காட்சியில் உருவாகியுள்ள இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாருடன் படம்… ஆனால் அவர் என்னை நம்பணும்- மாரி செல்வராஜ் சொன்ன விஷயம்!

கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ பதிவு :

இந்த அரசன் திரைப்படத்தின் ப்ரோமோவில் நடிகர் சிலம்பரசன் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோவில் சிலம்பரசன் தனுஷை பற்றி பேசிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் முக்கிய பங்கற்றுகிறார் என கூறப்பட்ட நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவில் அவர் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசன் படமானது வடசென்னை படத்தின் பின்னணி கதையைக் உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டநிலையில், இந்த ப்ரோமோவிலும் இந்த அரசன் படமானது வட சென்னை படத்தின் சொல்லப்படாத கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மமிதா என்னை உண்மையாகவே உதைச்சாங்க.. அதனால் என்னுடைய போன் நொறுக்கிடுச்சி.. பிரதீப் ரங்கநாதன் கலகல பேச்சு!

மேலும் இந்த ப்ரோமோவில் அனிருத்தின் பின்னணி இசையும் சிறப்பாகவே வந்துள்ளது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. தக் லைஃப் படத்தின் தோல்வியை தொடர்ந்து, இந்த அரசன் திரைப்படமானது சிலம்பரசனுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் :

இந்த அரசன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைப்பதாக ஆரம்பத்தில் பேசப்பட்டநிலையில், நேற்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்தான் அரசன் திரைப்படத்திற்கு இசையமைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இதுவரை சிலம்பரசனின் படத்திற்கு அனிருத் இசையமைத்ததில்லை என்ற நிலையில், இவர்கள் இருவரின் காம்போவில் இந்த அரசன் படம்தான் முதலில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.