Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Keerthy Suresh: மிஷ்கினின் கூட்டணி.. இயக்குநருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh Birthday Celebrations: கீர்த்தி சுரேஷின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது. இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். மிஷ்கின் கூட்டணியில் இவர் புதிய படம் நடிக்கும் நிலையில், அந்த படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Keerthy Suresh: மிஷ்கினின் கூட்டணி.. இயக்குநருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!
படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2025 23:11 PM IST

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ரகு தாத்தா (Raghu Thatha). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படங்களை தொடர்ந்து இந்தி சினிமாவிலும் இவர் கதாநாயகியாகவும் அறிமுகமாகினார். இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் இந்தியில் வெளியான “பேபி ஜான்” (Baby Jonh) என்ற படத்தின் மூலம் இந்தியிலும் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு ஓரளவு வரவேப்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita), கண்ணிவெடி மற்றும் மிஸ்கின் கூட்டணியில் ஒரு படம் என 3 படங்ககளில் நடித்துவருகிறார். அதில் ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணி வெடி போன்ற படங்களின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். மிஷ்கின் (Mysskin) கூட்டணி படத்தில் இவர் நடித்துவரும் நிலையில், அந்த படத்தின் இயக்குநர் பிரவீன் எஸ் விஜய்க்கும் (Praveen S Vijay) இன்றுதான் பிறந்தநாள். இந்நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் கேக் வெட்டி தங்களின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வசூலில் பட்டையை கிளப்பும் காந்தாரா சாப்டர் 1… 2 வார முடிவில் வசூல் எவ்வளவு ?

கீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாத்து தெரிவித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படங்கள் :

நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் தமிழில் 3 படங்கள் தயாராகிவரும் நிலையில், மேலும் தெலுங்கு சினிமாவிலும் படங்களில் நடிக்கவுள்ளார். இவரின் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் உப்பு கப்புறம்பு என்ற படமானது ஓடிடியில் வெளியானது.

இதையும் படிங்க: கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா.. ஜீவா TTT பட டீசர் இதோ!

இந்த படத்தைத் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் எதிலும் இவர் ஒப்பந்தமாகாத நிலையில், தற்போது மிக பிரம்மாண்ட படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டாவின் VD15 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ் :

இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் மகாநதி படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இந்த VD15 என்ற படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.