Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diesel: ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றியை கொடுக்குமா இந்த டீசல் படம்? விமர்சனம் இதோ!

Diesel Movie Review: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படம்தான் டீசல். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சங்கள் குறித்தும், படம் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக பார்க்கலாம்.

Diesel: ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றியை கொடுக்குமா இந்த டீசல் படம்? விமர்சனம் இதோ!
டீசல் திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2025 17:02 PM IST

நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் டீசல் (Diesel). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்க, தி தேர்ட் ஐ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முன்னணி ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) நடித்திருந்தார். இந்த டீசல் திரைப்படமான வடசென்னை மீனவ கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாண் வடசென்னை பகுதியை சேர்ந்த மீனவனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த படமும் திரையரங்குகளில் பாசிடிவ் விமர்சங்களை பெற்றுவருகிறது.

இப்படமானது இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம். மேலும் இந்த படம் எப்படி இருக்கிறது எனது பற்றிய விவரங்களையும் காணலாம்.

இதையும் படிங்க: ஹாட்ரிக் வெற்றியா? – பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட விமர்சனம்!

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சன பதிவுகள் :

இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு மிகவும் அருமையாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் இதுவரை நடித்திருந்த படங்களை ஒப்பிடும்போது, இப்படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் அவரின் நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

டீசல் திரைப்படத்தின் கதைக்களம் என்ன?

இந்த டீசல் திரைப்படமானது 90கள் தொடங்கி 2014ம் ஆண்டு வரை நடைபெற்ற கச்சா எண்ணெய் கடத்தல் மற்றும் அரசியல் கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டகமாக வெளியாகியுள்ளது. இந்த படமானது வடசென்னை பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நடிகை அதுல்யா ரவியின் நடிப்பும் மிக அருமையாகவே வந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் பீர் பாடலுக்கு திரையரங்கமே வைப் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாதித்தாரா துருவ்?.. பைசன் படத்தின் விமர்சனம் இதோ!

டீசல் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?

இந்த டீசல் திரைப்படமானது உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காதல், எமோஷனல் மற்றும் அரசியல் போன்ற பல்வேறு கதைகளை உள்ளடக்கிய படமாக இந்த டீசல் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. நிச்சயமாக திரையரங்கு சென்று பார்க்கும் அளவிற்கு நல்ல படமாக இந்த டீசல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.