Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Harish Kalyan: ‘டீசல் படம் தீபாவளி ரேஸில் வர என்ன காரணம்?’ ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan About Diesel Movie: தமிழில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படம்தான் டீசல். இந்த படமானது தீபாவளி ரேஸில் மற்ற படங்களுடன் வெளியாக காரணம் பற்றி ஹரிஷ் கல்யாண் விளக்கமாக பேசியுள்ளார்.

Harish Kalyan: ‘டீசல் படம் தீபாவளி ரேஸில் வர என்ன காரணம்?’ ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
ஹரிஷ் கல்யாண்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2025 21:53 PM IST

நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) நடிப்பில் தொடர்ந்த தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இதுவரை 13 படங்கள்  வெளியாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான பார்க்கிங் (Parking) மற்றும் லப்பர் பந்து (Lubber Pandhu) போன்ற படங்கள் ஒட்டுமொத்த மக்களிடையே எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அந்த வகையில், இந்த படங்களை தொடர்ந்து இவர் நடித்துவந்த திரைப்படம்தான் டீசல் (Diesel). இந்த படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி (Shanmugam Muthusamy) இயக்க, தி தியேர்ட் ஐ என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த டீசல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

மேலும் இந்த படமானது தீபாவளிக்கு வெளியாகின்ற நிலையில், தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாக ஹரிஷ் கல்யாண தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசிய இவர், டீசல் திரைப்படமானது தீபாவளி படங்களின் ரேஸில் வருவதற்கான காரணம் என்ன என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம் – வைரலாகும் போஸ்ட்

டீசல் படத்தின் தீபாவளி ரிலீசிற்கு என்ன காரணம் என்பது பற்றி ஹரிஷ் கல்யாண் பேச்சு :

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் டீசல் படமானது வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் சிறப்பாக நடைபெற்றுவந்தது. அதில் ஒரு நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய ஹரிஷ் கல்யாண, டீசல் படமானது தீபாவளிக்கு வெளியாகுவதற்கு என்ன காரணம் என பேசியுள்ளார். அதில் அவர், ” டீசல் திரைப்படம் தீபாவளி படங்களின் ரேஸில் கலந்துகொள்ள காரணம் என்னனா… அதற்கு காரணமே இல்ல சார். பெரிய பட்ஜெட் திரைப்படம், மேலும் தீபாவளி லீவ் டைம், எல்லா திரைப்படத்திற்கு ஒரு விதி இருக்கும், அந்தந்த படம் அதற்கேற்ற விதியை தேடி அதுவாகவே வந்து நிற்கும் என சொல்வார்கள்.

இதையும் படிங்க: புது காம்போ… வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘அரசன்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் – உறுதி செய்த படக்குழு

அதுபோல் இந்த டீசல் படமானது ஒரு பட்ஜெட்டில் தொடங்கி, மற்றொரு பட்ஜெட்டில் முடிந்தது. மேலும் மற்ற நிறைய விஷயங்கள் இந்த படத்தில் மாறியிருக்கிறது. அதே மாதிரிதான். மற்ற படங்களுடன் போட்டியாக நினைத்தால் போட்டி. யார் என்ன நினைத்தாலும் பிரச்னை இல்லை” என நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளிப்படையாக அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

டீசல் திரைப்படத்தின் தொடர்பாக ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த டீசல் திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருவதாக நடிகர் ஹரிஷ் கல்யாண மேடையில் தெரிவித்திருந்தார். மேலும் இப்படமானது முழுக்க ஆக்ஷ்ன் படமாக தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக வரவேற்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.