Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாகை சூட வா படத்தில் கலர் தியரி இப்படி இருக்கும் – இயக்குநர் சர்குணம் ஓபன் டாக்

Director Sarkunam: இயக்குநர் சர்குணம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாகை சூட வா. இந்தப் படத்தில் கலர் தியரியை கதையுடன் எப்படி பயன்படுத்தினார் என்பது குறித்து இயக்குநர் சர்குணம் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வாகை சூட வா படத்தில் கலர் தியரி இப்படி இருக்கும் – இயக்குநர் சர்குணம் ஓபன் டாக்
வாகை சூட வாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2025 21:47 PM IST

இயக்குநர் சர்குணம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி செப்டம்பர் மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வாகை சூட வா. பீரியட் ட்ராமாவாக உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விமல் (Actor Vimal) நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாக்யராஜ்,
பொன்வண்ணன், தஷ்வந்த், தம்பி ராமையா, இளங்கோ குமரவேல், சதீஷ், சூரி, தென்னவன், பூவிதா, வணக்கம் கந்தசாமி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனமான வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் என். புராண விஸ்வநாதன் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் சர்குணம் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வாகை சூட வா படத்தில் பச்சி நிறம் பெரிதாக காட்டப்படவில்லை:

அதன்படி செங்கல் சூளையில் காலம் காலமாக அடிமைகளாக வாழும் மக்களின் பிள்ளைகளுக்கு அரசு உதவி பெரும் அமைப்பின் மூலமாக பாடம் எடுக்க வாத்தியாராக வருகிறார் விமல். அந்த ஊரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செங்கல் வெட்டும் தொழிலையே செய்து வருகின்றனர்.

Also Read… ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான அழகான கதை – கும்கி 2 படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

இந்த நிலையில் அந்த குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆசிரியராக நடிகர் விமல் நடித்து இருப்பார். அப்படி இருக்கையில் இயக்குநர் சர்குணம் இந்தப் படம் பற்றி பேசுகையில் படத்தில் பச்சை நிறமே அந்த மக்களில் வாழ்க்கை சூழலில் காட்டப்பட்டு இருக்காது. அவர்களின் உடைகளில் இருந்து வாழும் இடம் வரை எதிலும் பச்சை நிறம் இருக்காது.

ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வரும் ஆசிரியர் விமலின் பெட்டி மட்டும் பச்சை நிறம் காட்டப்படும். காரணம் அந்த குழந்தைகளின் சிலேட்டு புத்ததங்களை சுமர்ந்து வரும் பெட்டி என்பதால் அதற்கு மட்டும் பச்சை நிறத்தை வைத்தோம் என்று இயக்குநர் சர்குணம் தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!