Tere Ishq Mein: ஆக்ஷன் ஹீரோவாக தனுஷ்… ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட முதல் பாடல் ரிலீஸ்!
Tere Ishq Mein First Song: உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளை படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தனுஷ் நடித்துவந்த இந்தி படம்தான் தேரே இஷ்க் மெய்ன். இப்படமானது 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகும் நிலையில், தீபாவளியி முன்னிட்டு இன்று முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

பான் இந்திய நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி, அதில் முன்னணி நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படமானது தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். மேலும் இந்த 2025ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein). இந்தி மொழியில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை க்ரிதி சனோன் (Kriti Sanon)நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை தனுஷின் அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Rai) இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகவும் நிலையில், இன்று 2025 அக்டோபர் 18ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : கில்லர் படம் இப்படித்தான் இருக்கும்.. எஸ்.ஜே.சூர்யா அப்டேட்!




தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் முதல் பாடல் பதிவு :
தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் ரிலீஸ் எப்போது :
தனுஷின் இந்த தேரே இஷ்க் மெய்ன் திரைப்படமானது, அதிரடி ஆக்ஷ்ன், காதல் மற்றும் எமோஷனல் நிறைந்த கதைக்களத்துடன் தயாராகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றியை கொடுக்குமா இந்த டீசல் படம்? விமர்சனம் இதோ!
இவரின் இசையமைப்பில்தான் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேரே இஷ்க் மெய்ன் திரைப்படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் நடிப்பில் உருவாகிவரும் படங்கள் :
நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி54 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், வரும் 2025 பிப்ரவரியில் வெளியாகவும் என தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55, மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56, அப்துல்கலாம் பயோபிக், இளையராஜா பயோபிக் என பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.