Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!

Dude Movie: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள மூன்றாவது படம் டியூட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!
டியூட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2025 19:25 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நாயகனாக நடித்து கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டியூட் (Dude Movie). ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடி பாணியில் வெளியாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 4 படங்களில் நடித்து இருந்தாலும் இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆர்.சரத்குமார், நேஹா ஷெட்டி, சத்யா, ஹிருது ஹாரூன், திராவிட் செல்வம், ஐஸ்வர்யா சர்மா, குழந்தை அனிஷா மாலிக், வினோதினி வைத்தியநாதன், ரோகினி, சலீம் குமார், ஆவுடையப்பன், ராமச்சந்திர ராஜு, ரகுவரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. மேலும் படம் வெளியாகி முதல் நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது எனபது குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல் நாள் மட்டும் டியூட் படம் ரூபாய் 22 கோடிகள் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம் – வைரலாகும் போஸ்ட்

டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்தப் படத்தின் கதையை படுத்துக்கொண்டே தான் கேட்டேன் – நடிகர் யோகி பாபு