அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
Retta Thala Movie: கோலிவுட் சினிமாவில் பிரபலம் மிக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் 2025ம் ஆண்டில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் ரெட்ட தல. இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் அடிப்படைக் கதை குறித்து அவர் தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் அருண் விஜய் (Arun Vijay). இவர் சினிமாவில் தொடர்ந்து ஹீரோ மற்றும் வில்லன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில், இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இட்லி கடை (Idli Kadai). நடிகரும் இயக்குநருமான தனுஷ் (Dhanush) இயக்கத்தில் இந்த படமானது வெளியானது. இப்படத்தில் நடிகர் அருண் விஜய், “அஸ்வின்” என்ற நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். இந்த இட்லி கடை படமானது எமோஷனல் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்தாக அருண் விஜயின் முன்னணி நடிப்பில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Krish Thirukumaran) இயக்கியுள்ள நிலையில், இந்த படமானது இந்த 2025ம் ஆண்டிற்குள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அருண் விஜய் ரெட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன், ரெட்ட தல திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: எட்டு திசையெங்கும் பரவும் பைசன் மீதான அன்பிற்கு நன்றி – மாரி செல்வராஜ்
ரெட்ட தல திரைப்படம் பற்றி இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் பேசிய விஷயம்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன், அதில் “ரெட்ட தல திரைப்படமானது எமோஷனல், ஆக்ஷ்ன், காதல் என அனைத்தையும் அடங்கியுள்ள திரைப்படமாக இருக்கும். இவ்வளவு முழுமையான கலவையை ஓர் படத்தில் பார்க்க வாய்ப்புகள் நீண்ட நாட்களாகிவிட்டன. இதைத்தான் முழுமையான சினிமா என்று அழைக்கிறோம்.
இதையும் படிங்க: ‘நா ரெடிதான் வரவா’.. இன்றோடு 2 வருடங்கள்.. விஜய்யின் லியோ திரைப்படம்!
நான் அனைவருக்கும் பொதுதுபோக்கு அளிக்கும், நீண்ட நாட்களுக்குப் பிறகும் மக்கள் மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடிய ஒரு படத்தை உருவாக்க விரும்பினோம். மேலும் இந்த ரெட்ட தல திரைப்படத்தில் அதை அனைத்தையும் எதிர்பார்க்கலாம். இந்த உண்மையை நான் எந்தது இதயத்திரிருந்து நேர்மையுடன் பேசுகிறேன்” என்று இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் கூறியுள்ளார்.
ரெட்ட தல திரைப்படம் குறித்து நடிகர் அருண் விஜய் வெளியிட்ட பதிவு :
Let this Ayudha Pooja bring new energy to chase your dreams and write new stories. 🌼💫
Wishes from team @arunvijayno1 ’s #RettaThala ❤️✨Produced By- @bbobby @BTGUniversal
Directed By- @KrisThiru1
A @SamCSmusic ‘s Musical@SiddhiIdnani @actortanya pic.twitter.com/7sbCF3Y018
— BTG Universal (@BTGUniversal) October 1, 2025
இந்த ரெட்ட தல படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலுமிதில் நடிகர்கள் தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஹரீஷ் போரடி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசைஅய்மிகும் நிலையில், சமீபத்தில் தனுஷின் குரலில் “கண்ணம்மா” என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது. இது இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.