எட்டு திசையெங்கும் பரவும் பைசன் மீதான அன்பிற்கு நன்றி – மாரி செல்வராஜ்
Director Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து உள்ள படம் பைசன் காளமாடன். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்ற நிலையில் அதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கத்தில் 5-வது படமாக உருவாகியுள்ளது பைசன் காளமாடன். இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துடன் இணைந்து பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய இரண்டு படங்களும் போட்டிப் போட்டது. ஆனால் இந்தப் படங்களை பின்னுக்குத் தள்ளி துருவ் விக்ரமின் பைசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த மூன்று படங்களில் பைசன் படத்திற்உ ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், கே. பிரபஞ்சன், அருவி மதன், அனுராக் அரோரா, விஸ்வதேவ் ரச்சகொண்டா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.




பைசன் காளமாடன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்:
கபடி வீரர் மனத்தி கிட்டனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் துருவ் விக்ரம் மனத்தி கிட்டனாக நடித்து இருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனத்தி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கிட்டன் என்ற நபர் தனது வாழ்க்கையில் இருந்த எல்லா தடைகளையும் மீறி எப்படி இந்தியாவிற்காக கபடி விளையாடினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய பாரட்டைப் பெற்றது. இதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது, எட்டு திசையெங்கும் பரவும் பைசன் மீதான அன்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் என் நன்றியும் பிரியமும் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… Mamitha Baiju: விஜய் சாருடன் நடித்தது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை- மமிதா பைஜூ ஓபன் டாக்!
மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
❤️❤️
எட்டு திசையெங்கும் பரவும் பைசன் மீதான அன்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் என் நன்றியும் பிரியமும் 👏🏻❤️#bison pic.twitter.com/32aYbNwEol— Mari Selvaraj (@mari_selvaraj) October 19, 2025
Also Read… அந்தப் படத்தின் ஷூட்டிங்கை எனக்காக தள்ளிப்போட்டார் கமல் ஹாசன் – நடிகை கோவை சரளா சொன்ன விசயம்!