அந்தப் படத்தின் ஷூட்டிங்கை எனக்காக தள்ளிப்போட்டார் கமல் ஹாசன் – நடிகை கோவை சரளா சொன்ன விசயம்!
Actress Kovai Sarala: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தொடர்ந்து தன்னிந்திய மொழிகளில் பல நூறு படங்களில் காமெடி நடிகையாக கலக்கி உள்ளார் நடிகை கோவை சரளா. இவர் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் கமல் ஹாசன் குறித்து பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆனால் பெண் காமெடி நடிகர்கள் இருப்பது குறைவாகவே இல்லது. இந்த ஆண்கள் நிறைந்த காமெடி உலகில் தனி ஒரு பெண்ணாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை கோவை சரளா (Actress Kovai Sarala). மேலும் இவரது காமெடியில் உருவான பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கோவை சரளா வடிவேலு உடன் கூட்டணியில் நடித்தப் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் இன்றி தற்போது சிறப்புக் கதாப்பாத்திரத்திலும் சீரியசான கதாப்பாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி இவர்கள் இருவரும் கோடியாக கடந்த 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வெளியான சதி லீலாவதி என்ற படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் மருத்துவராக இருக்கும் நடிகர் கமல் ஹாசன் அவரது நண்பர் ரமேஷ் அரவிந்தின் திருமணத்தை மீறிய உறவிற்கு உதவப் போய் மனைவி கோவை சரளா இவருக்கு தவறான உறவு இருப்பதாக புரிந்துக் கொள்வார். காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.




சதி லீலாவதி படத்தில் நடித்த அனுபவம் இதுதான்:
இந்த நிலையில் சதி லீலாவதி படத்தில் நடிப்பதற்காக தன்னை அனுகிய போது மிகவும் பிசியாக இருந்துள்ளார் கோவை சரளா. அப்போது தொடர்ந்து அந்தப் படத்தில் நடிப்பதற்கான கால் சீட் வழங்குவதற்கு தாமதம் ஆகியுள்ளது. தொடர்ந்து படக்குழுவினர் முயற்சித்தும் தான் முன்னதாக கமிட்டான படங்களுக்குப் பிறகே இந்தப் படத்தில் நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் கமல் ஹாசன் ஒப்புக்கொண்டு கோவை சரளாவிற்காக பல நாட்கள் காத்திருந்ததாக அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது டெல்லி க்ரைம் சீசன் 3 – வைரலாகும் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் கோவை சரளாவின் வீடியோ:
View this post on Instagram