Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸ் வீட்டின் ஓர்ஸ்ட் பெர்ஃபார்மர்.. சிறைக்கு போகும் ஆதிரை- அரோரா.. வைரலாகும் ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 9: ஆண்டுதோறும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக வெளியாகிவருவது பிக் பாஸ். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் வீட்டின் ஓர்ஸ்ட் பெர்ஃபார்மர்.. சிறைக்கு போகும் ஆதிரை- அரோரா.. வைரலாகும் ப்ரோமோ!
பிக் பாஸ் 9 தமிழ்
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2025 15:23 PM IST

தமிழ் மக்களிடையே சின்னத்திரை பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 8 சீசன்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கடந்த 2025 அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்பட்டு வருகிற்து. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவழங்கும் நிலையில், மக்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், நந்தினி என்பவர் முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் அதை தொடர்ந்து, முதல் வார எவிக்ஷனில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 18 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் எபிசோடுகள் விமர்சிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 12வது நாளில் முதலில் வெளியான ப்ரோமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டின் இந்த வார ஓர்ஸ்ட் பெர்ஃபார்மர் (Worst Performers) யார் என்பதை தேர்வு செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா.. ஜீவா TTT பட டீசர் இதோ!

பிக் பாஸ் குழு வெளியிட்ட 12வது நாளின் முதல் ப்ரோமோ பதிவு :

பிக் பாஸ் வீட்டின் இந்த வார ஓர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார்?

இந்த வாரத்திற்கான ஓர்ஸ்ட் பெர்ஃபார்மராக போட்டியாளர்கள் இருவரை தேர்வு செய்யவேண்டும் என பிக்பாஸ் குழு அறிவித்திருந்தது. அதன்படி, ஆதிரை மற்றும் அரோரா சிங்க்ளேர் என இருவரை போட்டியாளர்கள் அனைவரும் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் பிக்பாஸ் வீட்டின் சிறைக்கு அனுப்பிவைப்பதாக பிக்பாஸ் குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வடசென்னை பாணி.. ரசிகர்களை கவர்ந்த சிலம்பரசனின் அரசன் ப்ரோமோ வீடியோ! 

இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், மேலும் இந்த ப்ரோமோவின் கீழ் மக்கள், இவர்கள் இருவருக்கும் இந்த சிறை தேவைதான் என்றும் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

பிக்பாஸ் குழு வெளியிட்ட ப்ரோமோ :

இந்த 2வது ப்ரோமோவில், ரம்யா ஜோ மற்றும் கம்ருதினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பிக்பாஸ் ஹவுஸ் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ் என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல அமைந்துள்ளது. இதுவும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.