Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா – உற்சாகத்தில் படக்குழு

Lokah Chapter 1 Chandara : நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்து மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் வெற்றிகரமாக கடந்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா – உற்சாகத்தில் படக்குழு
லோகா சாப்டர் 1 சந்திரா Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Oct 2025 16:32 PM IST

இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ (Super Hero) கதையை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாகும் படங்கள் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த காலம் மாறி தற்போது இந்திய சினிமாவிலும் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் குறிப்பாக மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் இந்தியா மட்டும் இன்றி உலக சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி முன்னதாக இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசஃப் இயக்கத்தில் வெளியான படம் மின்னல் முரளி.

மின்னல் தாக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு அதீத சக்தி கிடைக்கிறது. அதனை அவர்கள் எப்படி பயண்படுத்துகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. இதில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தப் படம் பல விருதுகளைக் குவித்ததுடன் மலையாள சினிமாவையும் உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.

தியேட்டரில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தது லோகா:

அந்த வரிசையில் தற்போது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்த லோகா சாப்டர் 1 சந்திரா படமும் இணைந்துள்ளது. அதன்படி இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது 50 நாட்களை நிறைவு செய்துள்ளது.

மேலும் நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில் சுமார் ரூபாய் 30 கோடிகள் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் உலக அளவில் ரூபாய் 300 கோடிகளை வசூலித்தது என்று படக்குழு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் 50 நாட்களை இந்தப் படம் வெற்றிகரமாக கடந்தது குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Also Read… ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்

லோகா சாப்டர் 1 சந்திரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சட்டம் பொண்ணுங்க சொன்னா நம்பும்பா… ஆண்பாவம் பொல்லாதது ட்ரெய்லர் இதோ!