Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kantara Chapter 1: திரையரங்குகளில் வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

Kantara Chapter 1 OTT Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இப்படமானது வெளியாகி சிறப்பாக வசூல் செய்துவரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.

Kantara Chapter 1: திரையரங்குகளில் வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
காந்தார சாப்டர் 1Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2025 16:36 PM IST

கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த திரைப்படத்தை பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) உருவாக்கியிருந்தார். இந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமானது, கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் முன் கதையை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது மிக பிரம்மாண்டமாகவும், கன்னட மக்களின் நாட்டார் தெய்வமான பஞ்சுரளி மற்றும் குலிங்கா போன்ற தெய்வங்களின் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தில் முன்னணி நாயகனாக ரிஷப் ஷெட்டி நடித்திருந்த நிலையில், மேலும் முக்கிய வேடங்களில் நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) மற்றும் நடிகர் ஜெயராம் (Jayaram) இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில் உலக அளவில் வசூலில் இதுவரை சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இப்படமானது வெளியாகி 3 வாரங்களான நிலையிலும், தற்போதுவரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த 2025 தீபாவளி ஸ்பெஷல் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படமானது எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: புது காம்போ… வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘அரசன்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் – உறுதி செய்த படக்குழு

காந்தாரா சாப்டர் 1 படத்தின் தீபாவளி ஸ்பெஷல் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு பதிவு :

காந்தாரா சாப்டர் 1ன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்த காந்தாரா படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி மற்றும் துளு போன்ற மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படமாறுபட்ட ஆக்ஷன் கதைக்களம் கொண்ட மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படம் சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை சுமார் ரூ 600 கோடிகளையும் கடந்து வசூல் செய்துவருகிறது. இந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமானது திரையரங்குகளில் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்

சாதாரணமாக எந்த படமானாலும் ஓடிடியில் 4 அல்லது 6 வாரங்களுக்குள் வெளியாகும். அந்த வகையில், காந்தாரா சாப்டர் 1ன் படமானது 6 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனமானது பெற்றுள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.