Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Leo Movie: ‘நா ரெடிதான் வரவா’.. இன்றோடு 2 வருடங்கள்.. விஜய்யின் லியோ திரைப்படம்!

2 years Of Leo: தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் தளபதியாக இருந்துவருபவர் விஜய். இவரின் முன்னணி நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் லியோ. இன்றுடன் இந்த திரைப்படமானது வெளியாகி 2 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான சிறப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Leo Movie: ‘நா ரெடிதான் வரவா’..  இன்றோடு 2 வருடங்கள்.. விஜய்யின் லியோ திரைப்படம்!
லியோ திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2025 17:57 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் சுமார் 68 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆண்டிற்கு ஒரு திரைப்படம் என்ற கணக்கில் தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகி, தமிழ் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அலறவைத்து வருகிறது. அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியிலும் வெளியான திரைப்படம்தான் லியோ (Leo). கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியில் இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இந்த் ஜோடியானது பல வருடங்களுக்கு பிறகு இந்த லியோ படத்தில் இணைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படமானது வெளியாகி பல்வேறு சட்ட சிக்கலையும் சந்தித்திருந்தது. அந்த வகையில் தளபதி விஜய்யின் இந்த படமானது 2023ம் ஆண்டில் தமிழ் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் 2வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்நிலையில் இன்றுடன் 2025 அக்டோபர் 19ம் தேதியுடன் இந்த லியோ படமானது வெளியாகி 2 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் வீடியோவை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சைக்கோ கில்லராக செல்வராகவன்… காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால்… ஆர்யன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு

லியோ திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் :

லியோ திரைப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் :

இந்த லியோ திரைப்படமானது மிக பிரம்மாண்டமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரு வேறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார். லியோ தாஸ் மற்றும் பார்த்திபன் என 2 வேடங்களில் விஜய் நடித்திருந்தார். இதில் லியோ தாஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே ரசிக்கப்பட்டாலும், இதில் அவர் நடித்திருந்த பார்த்திபன் கதாபாத்திரம் பார்வையாளர்களின் மனதை தொட்டது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: பிரபல தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்? வைரலாகும் தகவல்!

அதிரடி ஆக்ஷ்ன், காதல், கடத்தல் மற்றும் முன்பகை தொடர்பான பிரம்மாண்ட கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தனது இசையமைப்பில் மூலம் ரசிகர்களை தன் பக்கத்திற்கு ஈர்த்தார் என்றே கூறலாம். இந்த படமானது தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் லியோ பட மொத்த வசூல் :

இந்த லியோ திரைப்படமானது பல்வேறுவிதமான சட்ட சிக்கல்களை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட உலகளாவிய வசூலில் சுமார் ரூ 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.