Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

Dhruv Vikram About Chiyaan Vikram: சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் முன்னணி நடிப்பில் சமீபத்தில் பைசன் படமானது வெளியானது. அந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துருவ் விக்ரம், தனது தந்தையான சியான் விக்ரம் தன்னை அடித்தது குறித்து பேசியுள்ளார்.

Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2025 19:57 PM IST

தமிழ் சினிமாவில் வளந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன் ஆவார். இவர் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான “ஆதித்ய வர்மா” (Aditya Verma) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக நுழைந்தார். இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க, தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார். வர்மா மற்றும் மகான் என போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் முன்னணி நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் பைசன் (Bison). இந்த திரைப்படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான 5வது படமாகும் இந்த பைசன். இந்த பைசன் திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக வெளியாகியுள்ளது.

இதில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துருவ் விக்ரம், தனது தந்தை விக்ரம், தன்னை அடித்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கருப்பா…. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு

சியான் விக்ரம் தன்னை அடித்தது குறித்து நடிகர் துருவ் விக்ரம் சொன்ன விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய துருவ் விக்ரம், “என் அப்பா என்னை வாழ்க்கையிலே ஒரு 2 அல்லது 3 தடவைதான் அடிச்சிருப்பாரு. ஐ படத்தில் உள்ள “மெரசலாயிட்டேன்” அந்த பாட்டை ஷூட்டிங் பண்ணுவதற்கு முன்னே, ஒரு பென்ட்ரைவில் எனது அப்பா வைத்திருந்தார். மேலும் சங்கர் சார் ரொம்ப கடினமாக இருப்பாரு, தன்னுடைய பட பாடல் ரிலீசிற்கு முன்னே வெளிய வரக்கூடாது என்று. நான் என்னை செய்தேன் என்றால் என் அப்பா வைத்திருந்த அந்த பென்ட்ரைவை, ஸ்கூலுக்கு எடுத்துப்போயிட்டேன். அந்த பென்ட்ரைவில் இருக்குற பட்டை ஸ்கூல்ல என் நண்பர்களுக்கு எல்லாருக்கும் போட்டு காமிச்சிட்டேன்.

இதையும் படிங்க: அந்த கதை விஜய்காக எழுதியது… நான் நடித்து மாஸ் ஹிட் கொடுத்தேன் – விஷால் சொன்ன விஷயம்!

எல்லாரிடமும் காட்டி கொஞ்சம் சீன் போட்டேன். அதன் பிறகு வீட்டிற்கு வந்தேன் நா அப்போது, அப்பா பாடிபில்டர் கெட்டப்பில் இருந்தாரு, ஓங்கி எனது முதுகில் ஒரு அடி அடிச்சாரு பாருங்க, அவரோட ஐந்து விறல் கை தடம் எனது முதுகில் 3 , 4 நாளா போகவே இல்ல. இதை எல்லாம் என்னோட அப்பட மாட்டிக்கொடுத்தது எனது அக்காதான்” என நடிகர் துருவ் விக்ரம் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

நடிகர் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

துருவ் விக்ரமின் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படமானது மக்களிடையே பாசிடிவ் விமர்சங்களை பெற்றுவருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை பல்வேறு பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.