Rukmini Vasanth: எனக்கு அந்த நடிகர் ரொம்ப பிடிக்கும்… அவர் கூட நடிக்க ஆசை- நடிகை ருக்மிணி வசந்த் ஓபன் டாக்!
Rukmini Vasanth Favorite Actor: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ருக்மிணி வசந்த். இவரின் நடிப்பில் சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 படமானது வெளியானது. இந்நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில் பேசிய நிலையில், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் பற்றி தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவின் மூலம் நாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருபவர் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth). இவர் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான “சப்த சாகரதாச்சே எல்லோ – சைடு ஏ” (Sapta Saagaradaache Ello – Side A) என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் தனது அசாதாரண நடிப்பின் மூலம் தென்னிந்திய மக்களிடையே மிகவும் பேசப்பட்டார். இந்த திரைப்படத்தை அடுத்ததாக தமிழிலும் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் மதராஸி (Madharaasi)திரைப்படத்தின் மூலம் தமிழில் நுழைந்தாலும், முதலில் வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தில் ருக்மிணி என்ற வேடத்தில்தான் இவர் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் “மாலதி” என்ற வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். மேலும் இவரின் நடிப்பில் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய ருக்மிணி வசந்த், தனக்கு பிடித்த தெலுங்கு நடிகர் யார் என்று கூறியுள்ளார். அதில் அவர், “நேச்சுரல் ஸ்டார் நானி தான் (Natural Star Nani) தெலுங்கில் ரொம்ப பிடித்த நடிகர்” என்று கூறியுள்ளார்.




இதையும் படிங்க: சரவெடி ஆயிரம் பத்தனுமா.. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
நடிகர் நானி குறித்து பேசிய ருக்மிணி வசந்த் :
அந்த நேர்காணலில் நடிகை ருக்மிணியிடம் உங்களுக்கு தெலுங்கில் மிகவும் பிடித்த நடிகர் யார் ? என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ருக்மிணி வசந்த், “தெலுங்கில் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் நேச்சுரல் ஸ்டார் நானி தான். அவருடன் இணைந்து நடிப்பதற்கு ஆசைப்படுவதாகவும் அவர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை ருக்மிணி வசந்தின் புதிய படம்:
நடிகை ருக்மிணி வசந்தின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தில் கனகவதி ராணி வேடத்தில் இவர் நடித்திருந்தார். தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.
இதையும் படிங்க: பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது… அப்டேட் இதோ!
இந்த படத்தை அடுத்ததாக இவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் “NTRNEEL” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். மேலும் சியான் விக்ரமின் நடிப்பில் உருவாக்கவுள்ள சீயான்64 படத்திலும் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.