பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது… அப்டேட் இதோ!
Pawan Kalyan OG Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவர் நடிகராக மட்டும் இன்றி துணை முதல்வராகவும் நடிப்பு அரசியல் என ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓஜி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் நடிகர் பவன் கல்யாண் (Actor Pawan Kalyan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகராக முன்னிலை வகிக்கும் நடிகர் பவன் கல்யாண் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் தற்போது துணை முதல்வராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அரசியல் மற்றும் நடிப்பு என இரண்டையும் ஒரே நேரத்தில் கவனித்து வரும் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தே கால் ஹிம் ஓஜி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் கடந்த 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து இருந்தார். இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுஜீத் எழுதி இயக்கி இருந்தார். படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் டி.வி.வி.தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.




அக்டோபர் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ஓஜி படம்:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பவன் கல்யாண் நடிப்பில் வெளியான இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… சட்டம் பொண்ணுங்க சொன்னா நம்பும்பா… ஆண்பாவம் பொல்லாதது ட்ரெய்லர் இதோ!
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Once upon a time in Mumbai, there lived a storm. And now, he’s back. 🌪️ pic.twitter.com/gILAkqzAW5
— Netflix India (@NetflixIndia) October 18, 2025
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படக்குழு