Karuppu: கருப்பா…. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!
Karuppu Movie First Single Promo: சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் கருப்பு. இப்படத்தின் முதல் பாடல் நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பான் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகரை வைத்திருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவருக்கு 3 வருடங்களுக்கு பின் தரமான ஹிட் கொடுத்த திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). இந்த திரைப்படத்திற்கு பின் மிக பிரம்மாண்டமான கதைக்களத்தில், சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் தயாராகிவரும் படம்தான் கருப்பு (Karuppu). இந்த திரைப்படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டு, பின் மிக பிரம்மாண்டமாக ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்த திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் 3வது உருவாகும் படமாக இந்த கருப்பு தயாராகிவருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக முன்னணி நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார்.
இந்த ஜோடி சுமார் 20 வருடங்களுக்கு பிறகும் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படத்திற்கும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் 2025 தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகிறது. இந்நிலையில், இன்று 2025 அக்டோபர் 19ம் தேதியில் இப்படத்தில் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: அந்த கதை விஜய்காக எழுதியது… நான் நடித்து மாஸ் ஹிட் கொடுத்தேன் – விஷால் சொன்ன விஷயம்!
ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட கருப்பு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ பதிவு :
First single #GodMode from tomorrow.!!! #Karuppu 🔥🔥 @Suriya_offl @SaiAbhyankkar @VishnuEdavan1 @thinkmusicindia @DreamWarriorpic pic.twitter.com/I06mkSS2MR
— RJB (@RJ_Balaji) October 19, 2025
கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த கருப்பு படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசைஅயமைத்துவரும் நிலையில், இவருக்கு மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படத்தின் கதைக்களமானது நீதி, தெய்வீகம், ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் நிறைந்த கதைக்களத்துடன் தயாராகிவருகிறதாம். இந்த திரைப்படத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நா ரெடிதான் வரவா’.. இன்றோடு 2 வருடங்கள்.. விஜய்யின் லியோ திரைப்படம்!
மேலும் இப்படத்தில் நடிகை திரிஷாவின் கதாபாத்திரமும் மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிருது. சூர்யாவின் இந்த கருப்பு படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவடையாமல் இருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த் கருப்பு படமானது வரும் 2026ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இது குறித்த படக்குழு எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.