Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது கருப்பு படத்தின் முதல் சிங்கிள் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ

Karuppu Movie: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கருப்பு. இந்தப் படம் முன்னதாகவே வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் படம் வெளியாக தொடர்ந்து தாமதாமாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை அறிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது கருப்பு படத்தின் முதல் சிங்கிள் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2025 18:50 PM IST

நடிகர் சூர்யா (Actor Suriya) தற்போது தனது 45-வது படம் மற்றும் 46-வது படத்தின் பணிகளில் தீவிரமாக நடித்து வருகிறார். இதில் நடிகர் சூர்யாவின் 45-வது படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன்படி நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இருவரும் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தின் டீசரில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளது தெரிகிறது. மேலும் மக்களுக்காக அவர் போராடும் நபராக அந்தப் படத்தில் நடித்து உள்ளதும் தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் உடன் இணைந்து நடிகர்கள் நட்டி சுப்ரமணியன், இந்திரன்ஸ், யோகி பாபு, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

20-ம் தேதி வெளியாகிறது கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்:

இந்த கருப்பு படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியாவது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனபடி படத்தின் முதல் சிங்கிள் வருகின்ற 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சட்டம் பொண்ணுங்க சொன்னா நம்பும்பா… ஆண்பாவம் பொல்லாதது ட்ரெய்லர் இதோ!

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 படம் முதல் மதராஸி படம் வரை… பர்த்டே பாய் அனிருத் ரவிச்சந்தரின் இசைப் பயணம் ஒரு பார்வை!