Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth: ‘சூப்பர் மாரி சூப்பர்’… பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

Rajinikanth Praises Mari Selvaraj: கோலிவுட் சினிமாவில் தென் மாவட்டங்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு படங்களை இயக்கி வெற்றிகொடுத்து வருபவர் மாரிசெல்வராஜ். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரி செல்வராஜைப் பாராட்டியுள்ளார்.

Rajinikanth: ‘சூப்பர் மாரி சூப்பர்’… பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் மற்றும் மாரி செல்வராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Oct 2025 13:23 PM IST

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளின் மூலம் மக்கள் மனதில் தொடர்ந்து பிரபலமாகிவரும் இயக்குநர்தான் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் முன்னணி இயக்கத்தில் இதுவரை மொத்தமே 5 படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பைசன் (Bison). இந்த திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க, முன்னணி நாயகனாக நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) நடித்திருந்தார். இந்த படமானது மணத்தி கணேஷ் என்ற கபடி போட்டியாளரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டும், தென்மாவட்டங்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்த கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரனாக நடித்துள்ளார், மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தையும் மாரி செல்வராஜையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) பாராட்டியுள்ளார். அது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் வழியில் பிரதீப் ரங்கநாதன்.. என்ன விஷயம் தெரியுமா?

பைசன் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் மாரி செல்வராஜ், சூப்பர் ஸ்டார் “இந்த படத்தை பார்த்ததாகவும், அவர் சூப்பராக வந்திருக்கிறது என்றும், இப்படத்திற்காக உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் , மாரி செல்வராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை, மாமன்னன் போன்ற படங்களுக்காக என்னை பாராட்டியத்தை தொடர்ந்து, இந்த பைசன் படத்திற்காகவும் தொலைபேசியில் அழைத்து என்னையும், ரஞ்சித் அண்ணனையும் ரஜினிகாந்த் சார் பாராட்டியுள்ளார் என்றும், அவரின் பாராட்டுகளுக்காக பைசன் படக்குழுவின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்” என  மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

பைசன் திரைப்படம் :

இந்த பைசன் திரைப்படமானது கபடி வீரன், தனது சாதியையும் கடந்து, தனது சாதனைக்காக முன்னேறுவது தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் காட்சிகள் நிஜவாழ்க்கையில் நடந்தது உண்மை என்றாலும், சில காட்சிகள் மட்டும் கற்பனையாக எடுத்திருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.