Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

Minsara Kanna movie: முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படம் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்தப் படம் தோல்வியை சந்திக்க பல காரணங்கள் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்
மின்சார கண்ணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2025 16:18 PM IST

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (Director KS Ravikumar) எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் மின்சார கண்ணா. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் கடந்த 9-ம் தேதி செப்டம்பர் மாதம் 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர் தளபதி விஜய் (Actor Thalapathy Vijay) இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மோனிகா காஸ்டெலினோ நடித்து இருந்தார். இவகளுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் குஷ்பு, ரம்பா, மணிவண்ணன், மன்சூர் அலி கான், கரண், ஆர்.சுந்தர்ராஜன், அனு மோகன், மனோபாலா, மதன் பாப், மாஸ்டர் மகேந்திரன், பி.எச்.தருண்குமார், கோவை சரளா, சந்திரகாந்த், பாவனா, முத்துகாளை, கிரேன் மனோகர், சி.ஆர்.சரஸ்வதி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார். அதன்படி படம் திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்களைக் கடந்தும் படத்தின் பாடல்கள் இன்றூம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே. ஆர். ஜி மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் கே. ஆர். கங்காதரன் தயாரித்து இருந்தார். படம் நல்ல கதையைப் பெற்று இருந்தாலும் ரசிகர்களிடையே தோல்வியை சந்தித்துள்ளது. அதுகுறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் விளக்கமாக பேசியுள்ளார்.

மின்சார கனவு படம் தோல்வியடைய நாயகிதான் காரணம்:

இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் மின்சார கனவு படத்தின் தோல்வி குறித்து கூறியதாகது, அந்த நேரத்தில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக இருந்தேன். அதன் காரணமாக படத்தின் நாயகியை தேர்ந்தெடுக்கும் பொருப்பை தயாரிப்பு குழுவிடம் கொடுத்தேன்.

அப்போது தயாரிப்பாளரின் மகன் தான் பாம்பே சென்று நாயகியை தேர்ந்தெடுத்தார். அந்தப் பொண்ணு நல்லா தான் நடிச்சாங்க. ஆனா அப்போ நடிகை ரம்பா உச்ச நடிகையாக இருந்தார். அவரை இரண்டாவது நாயகியாக போட்டதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்து இருந்தார்.

Also Read… கல்யாணை மாலை புது புது அர்த்தங்களை விட ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ் – எஸ்.ஜே.சூர்யா!

இணையத்தில் கவனம் பெறும் கே.எஸ்.ரவிக்குமார் பேசிய வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by TouringTalkies (@touringtalkies1)

Also Read… அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை – இயக்குநர் மிஷ்கின்