டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியானது அதிரடி படத்தின் டீசர்
Athiradi Title Teaser Malayalam | மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர்கள் பேசில் ஜோசஃப், டொவினோ தாமஸ் மற்றும் வினீத் ஸ்ரீநிவாசன் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது மற்ற மொழிகளில் அதிகம் நிகழ்வதை விட மலையால சினிமாவில் அடிக்கடி நிகழும் ஒன்று. அதன்படி இந்த மலையாள சினிமாவில் எந்தவித ஈகோவும் இன்றி முன்னணி நடிகர்கள் தொடர்ந்து மற்ற முன்னணி நடிகரின் படங்களில் நடித்து வருகின்றனர். அது சின்ன கதாப்பாத்திரமோ அல்லது பெரிய கதாப்பாத்திரமோ தொடர்ந்து நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மலையாள சினிமாவில் வெளியான படங்கள் உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் அதிரடி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி நடிகர்கள் டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் பேசில் ஜோசஃப் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் அதிரடி. இந்தப் படத்தை இயக்குநர் அருண் அனிருதன் எழுதி இயக்கி உள்ளார். அருண் அனிருத்தன் படையோட்டம் படத்தின் எழுத்தாளர் மற்றும் மின்னல் முரளியின் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை பாசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட் மற்றும் டாக்டர் அனந்து எஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் டாக்டர் அனந்து எஸ் மற்றும் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து இந்தப் படத்தை, சமீர் தாஹிர் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.




மலையாள சினிமாவில் வெளியானது அதிரடி படத்தின் டீசர்:
இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் ஒரு இன்வஸ்டிகேஷனின் வினீத் ஸ்ரீநிவாசன் இருக்கிறார். அவரிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே பேசில் ஜோசஃப் மற்றும் டொவினோ காட்டப்படுகிறார்கள். அதன்படி அந்த குற்றத்தில் இவர்கள் இருவருமே இணைந்து இருப்பது தெரிகிறது. மேலும் இந்த டீசரைப் பார்க்கும் போது இது ஒரு ஆக்ஷன் படமாக இருப்பது தெரியவந்துள்ளது.
Also Read… தீவிர உடற்பயிற்சி, நியூ போட்டோ ஷூட் – நடிகர் சூரியின் வைரல் வீடியோ!
நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Athiradi – Official Title Teaser Out Now! https://t.co/AM3IzTVJ9w @basiljoseph25 @Vineethsreeni84 pic.twitter.com/Kv5WD7fGxT
— Tovino Thomas (@ttovino) October 18, 2025
Also Read… பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது… அப்டேட் இதோ!