Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mari Selvaraj: அந்த மலையாள படத்தைப் பார்த்து பொறாமைப்பட்டேன்.. மாரி செல்வராஜ் சொன்ன படம் என்ன தெரியுமா?

Mari Selvaraj About Mammootty Movie: மாரி செல்வராஜ் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும், இவரின் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் பைசன் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், மம்மூட்டியின் மலையாள படம் ஒன்றை பார்த்து பொறாமைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj: அந்த மலையாள படத்தைப் பார்த்து பொறாமைப்பட்டேன்.. மாரி செல்வராஜ் சொன்ன படம் என்ன தெரியுமா?
மம்மூட்டி மற்றும் மாரி செல்வராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Oct 2025 19:18 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை உருவாக்கி வெற்றிபெற்றிருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இதுவரை சுமார் 4 படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில், 5வது திரைப்படமாக தயாராகியிருந்த படம்தான் பைசன் (Bison). இப்படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் (Dhuruv Vikram) கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த பைசன் திரைப்படமானது கபடி, அரசியல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைசன் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran), பசுபதி, லால், அமீர் மற்றும் ரஜீஷா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒண்றில் பேசிய மாரி செல்வராஜ், மம்முட்டியின் மலையாள திரைப்படம் பற்றி பொறாமைப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த படம் வேறு எதுவுமில்லை, கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியான “பிரம்மயுகம்” (Bramayugam) திரைப்படம்தான்.

இதையும் படிங்க: சரவெடி ஆயிரம் பத்தனுமா.. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

மம்முட்டியின் பிரம்மயுகம் திரைப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ்

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “நான் பிரம்மயுகம் திரைப்படத்தைப் பார்த்து பயங்கரமாக பொறாமைப்பட்டேன். பொறாமை என்றால் அந்த படத்தைப் பார்த்து எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை. அந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அந்த மாதிரி இருந்தது. நாம் எதாவது ஒரு படத்தை இன்னும் அதிக நேரம் பார்க்கவேண்டும் என்று நினைப்போம் அல்லவா, அந்த மாதிரி அந்த பிரம்மயுகம் திரைப்படம் இருந்தது. அந்த மாதிரியான அனுபவத்தை இந்த பிரம்மயுகம் திரைப்படம் எனக்கு கொடுத்தது.

இதையும் படிங்க: ‘பைசன் படத்தை கண்ணீர்மல்க பார்த்தேன்’: சந்தோஷ் நாராயணன்!

அந்த படத்தின் காட்சிகள் எனது மனதில் இருந்து ஒரு 3 , 4 நாட்களுக்கு பிறகும் நீங்காகவே இல்லை. நாம் கருப்பு வெள்ளையில் சிறிய சிறிய ஷாட்ஸ் மற்றும் வீடியோ பண்ணுகிறோம். ஆனால் ஒரு முழு படத்தையும் பிளாக் அன்ட் ஒயிட்டில் ஒரு முழு படத்தையும் இயக்குநர் பார்த்து, அந்த படத்தை எடுக்கும் விதம் எனக்கு தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபனாக பேசியுள்ளார்.

பிரம்மயுகம் திரைப்படம் பற்றி மாரி செல்வராஜ் பேசிய வீடியோ:

நடிகர் மம்மூட்டியின் இந்த பிரம்மயுகம் திரைப்படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.