உலக அளவில் ரூபாய் 35 கோடிகளை வசூலித்த பைசன் காளமாடன் – உற்சாகத்தில் படக்குழு
Bison Kaalamaadan Collection Update: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). இவரது இயக்கத்தில் இதுவரை 5 படங்கள் தான் வெளியாகி உள்ளது என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவரது நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து கபடி மூலம் பெரிய இடத்திற்கு வந்த ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன்படி அந்த கபடி வீரராக நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேசுவரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி, லால், அழகம் பெருமாள் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர்.




உலக அளவில் ரூபாய் 35 கோடிகளை வசூலித்த பைசன் காளமாடன்:
படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி! பைசன் காலமாடன் முதல் நாளில் நூறு சதவீதத்திற்கும் மேலாக வளர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போடுகிறது. தமிழ் பதிப்பு மட்டும் உலகளவில் 35 கோடி வசூல் செய்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read… அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை – இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Extremely grateful for all your love! #BisonKaalamaadan grows over a hundred percent over day one and is roaring at the box office. Just Tamil version collects 35cr gross collections worldwide
New Raid #Bison ready for Telugu release 🦬#BisonKaalamaadan 🦬 #DiwaliWinner 💥… pic.twitter.com/FqeV8unvls
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2025
Also Read… நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்