Dude Movie: டியூட் உன்ன மிஞ்சினவன் யாருமில்ல.. 2 நாட்களில் ‘டியூட்’ படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Dude Movie 2nd Day Box Office Collection: வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் டியூட். இப்படமானது வெளியாகி 2 நாட்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், 2 நாள் உலகளாவிய வசூல் விவரத்தை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது டாப் நடிகர்களை பீட் செய்யும் விதத்தில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்க, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி ஹீரோவாக நடிக்க, அவருடன் இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) , ஹிருது ஹூரன், சரத்குமார் (Sarathkumar) , ரோகிணி மாற்று பல்வேறு பிரபலங்களும் இணையானது நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரம் முழுமையாக எமோஷனல், காமெடி மற்றும் மாறுப்பட்ட விதத்தில் அமைந்திருந்தது என்றே கூறலாம்.
கதை வாரியாக இந்த படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகவும் அருமையாக வந்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த டியூட் படமானது திரையரங்குகளில் வெளியாகி 2 நாட்களை நிறைவு செய்த நிலையில், படக்குழு மொத்த உலகளாவிய வசூல் விவரத்தை அறிவித்துள்ளது. அதன்படி பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் கூட்டணி படமான டியூட் மொத்தத்தில் சுமார் “ரூ 45 கோடிகளுக்கு” மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: கல்யாணை மாலை புது புது அர்த்தங்களை விட ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ் – எஸ்.ஜே.சூர்யா!
டியூட் திரைப்படத்தின் 2வது நாள் வசூல் விவரம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
DUDE DIWALI BLAST is unstoppable at the box office with massive love from the audience ❤️#Dude collects a gross of 45 CRORES WORLDWIDE in 2 days & going super strong ❤🔥
Book your tickets now and celebrate #DudeDiwali 🔥
🎟️ https://t.co/JVDrRd4PZQ🎟️ https://t.co/4rgutQNl2n… pic.twitter.com/TLNPYTpNsV
— Mythri Movie Makers (@MythriOfficial) October 19, 2025
டியூட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :
இந்த டியூட் திரைப்படமானது 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவிற்கு இணையாக தெலுங்கு மொழியிலும் வரவேற்புகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு அந்த நடிகர் ரொம்ப பிடிக்கும்… அவர் கூட நடிக்க ஆசை- நடிகை ருக்மிணி வசந்த் ஓபன் டாக்!
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் நிலையில் ரசிகர்களிடையே ஏதோர்பார்ப்பும் மிக பிரம்மாண்டமாக இருந்தது என்றே கூறலாம். இந்த படமானது வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த டியூட் திரைப்படம் வரும் நவம்பர் முதல் அல்லது 2 வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.