Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Prabhas: சீதா ராமன் பட இயக்குநருடன் கூட்டணி… பிரபாஸின் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது!

Prabhas New Movie Title: தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரபாஸ். இவரின் முன்னணி நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புது படம் உருவாகிவருகிறது. இந்நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Prabhas: சீதா ராமன் பட இயக்குநருடன் கூட்டணி… பிரபாஸின் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது!
பிரபாஸின் புதிய படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2025 15:06 PM IST

தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் பிரபாஸ் (Prabhas). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கல்கி 2898ஏடி (Kalki 2898AD) என்ற திரைப்படம். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், உலகளாவிய வசூலில் சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் என்ற திரைப்படத்தில் பிரபாஸ் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், தமிழில் மட்டும் ஜனவரி 10 ஆம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இயக்கத்தில் பிரம்மாண்டமான வரலாற்று படத்தில் நடித்துவருகிறார்.

இயக்குநர் ஹனு ராகவபுடி, துல்கர் சல்மானின் “சீதா ராமன்” படத்தை இயக்கி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் சமீபகாலமாக இணையத்தில் கசிந்துவந்த நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இன்று 2025 அக்டோபர் 23ம் தேதியில் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு “ஃபௌஜி” (Fauji) என படக்குழு டைட்டில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

பிரபாஸின் ஃபௌஜி பட டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் ஹனு ராகவபுடி :

பிரபாஸின் ஃபௌஜி திரைப்படம் :

இந்த படத்தை இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் நிலையில், குட் பேட் அக்லி மற்றும் டியூட் போன்ற தமிழ் படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது இந்த படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் முன்னணி நடிகராக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை இமாவி இஸ்மாயில் என்ற நடிகை நடித்துவருகிறார். இவர் பாகிஸ்தானிய நடிகை என்றும் கூறப்படுகிறது. இந்த படமானது 1940ம் ஆண்டுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த படமானது ஸ்பை திரில்லர் ஜானரில் மாறுபட்ட கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது.

இதையும் படிங்க: டியூட் பட விமர்சனம்… சக்ஸஸ் மீட்டில் வெளிப்படையாக பேசிய பிரதீப் ரங்கநாதன்!

இந்த ஃபௌஜி திரைப்படமானது மொத்தம் 6 மொழிகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் உருவாகிவருகிறது. இந்த படமானது சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026 ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.