Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pradeep Ranganathan: டியூட் பட விமர்சனம்… சக்ஸஸ் மீட்டில் வெளிப்படையாக பேசிய பிரதீப் ரங்கநாதன்!

Pradeep Ranganathan About Dude Movie: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் டியூட். இந்த படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், ரூ 95 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவருகிறது. இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதில் டியூட் படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Pradeep Ranganathan: டியூட் பட விமர்சனம்… சக்ஸஸ் மீட்டில் வெளிப்படையாக பேசிய பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Oct 2025 23:02 PM IST

தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார். இந்த இருவர் கூட்டணியும் டியூட் படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்(Sai Abhyankkar) இசையமைத்திருந்தார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் முழுவதும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா (Dude Success Meet) இன்று 2025 அக்டோபர் 22ம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “இந்த டியூட் படத்தை பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலில் இவருக்கு இந்த கதை பிடிக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘கருத்த மச்சான் பாடல்’.. அனுமதியின்றி டியூட் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் புகார்!

டியூட் திரைப்படத்தை பற்றி வெற்றிவிழாவில் வெளிப்படையாக பேசிய பிரதீப் ரங்கநாதன் :

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “மமிதா பைஜூவின் நடிப்பை கண்டும் நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். சில காட்சிகளில் நீங்கள் நடித்திருக்கும் விதத்தை பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் கூறி நெகிழ்ந்தேன். மேலும் இந்த படத்தை எனக்காக கொடுத்த இயக்குனர் கீர்த்திஸ்வரன் நன்றி, மற்றும் படக்குழுவினருக்கு நன்றி” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க : பிரபாஸின் பர்த்டே ஸ்பெஷல்… நாளை வெளியாகிறது புதிய படத்தின் டைட்டில் போஸ்டர்!

தொடர்ந்து டியூட் படம் பற்றி பேசிய ஆரம்பித்த பிரதீப் ரங்கநாதன், ” இந்த டியூட் படம் நிறைய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இயக்குனர் சொன்ன விஷயம் எல்லாருக்கு போய் சேர்ந்திருக்கும். இந்த படத்தை ஒவ்வொரும் முறையும் பார்க்கப்பார்க்க நிறைய நிலைகள் இருக்கும்.  இந்த படத்தின் கதையை முதலில் கேட்கும்போது எனக்கு புரியல, அதன்பிறகு கொஞ்ச நாளுக்கு பின் எனக்கு ஒவ்வொரு காட்சிகளும் இப்படி அருமையாக இருக்கிறதே என உணர்ந்து இந்த படத்தை பண்ணலாம் என நினைத்தேன்.

டியூட் படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோ :

ஒருவேளை மாற்று கருத்து உள்ளவர்களுக்கும், இந்த படத்தைப் பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்று நினைக்கிறேன். மேலும் நிறையபேர் இந்த படத்தை 2வது முறை பார்க்கும்போது நன்றாக இருக்கிறது, 3வது முறை பார்க்கும்போது நன்றாக இருக்கிறது என்று எல்லாம் கூறினார்கள். அதுபோல இந்த டியூட் படமானது மீண்டும் மீண்டும் பார்க்ககூடிய படமாக இருக்கிறது” என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.