Ilaiyaraaja: ‘கருத்த மச்சான் பாடல்’.. அனுமதியின்றி டியூட் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் புகார்!
Ilaiyaraajas Lawsuit: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் டியூட். இப்படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜாவின் தரப்பில், சோனி மியூசிக் லேபிள் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) அதிரடி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூவும் இணைந்து நடித்திருந்தார். மாறுபட்ட காதல் கதையுடன், எமோஷனல், காமெடி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என வித்தியாசமான படமாக இது அமைந்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான முதல் படமாகும் இந்த டியூட். இந்நிலையில் இந்த படத்தில் ஓர் காட்சியில் மமிதா பைஜூ (Mamitha Baiju) திருமண மேடையில் “கருத்த மச்சா” என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இந்த பாடலை இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்திருந்த நிலையில், அந்த பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக “சோனி மியூசிக் லேபிள்” நிறுவனத்தின் மீது இளையராஜா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.




இதையும் படிங்க: ‘சூப்பர் மாரி சூப்பர்’… பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
டியூட் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ:
The whole theatre was blasted with this unexpected one of #
MamithaBaiju 😁💃 pic.twitter.com/Ix3yiOsMNX— AmuthaBharathi (@CinemaWithAB) October 21, 2025
டியூட் படத்தின் மீது தனி வழக்கு தொடரலாம்
பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தில் இளையராஜாவின் 2 பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இளையராஜாவின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு நீதிபதி செந்தில்குமார், டியூட் படத்தின் மீது தனி வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிம்புவின் நடிப்பில் வெளியான வல்லவன் படம் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது!
மேலும் இந்த வழக்கின்போது, இளையராஜாவின் தரப்பு சோனி மியூசிக் லேபிள் நிறுவனத்தின் மீது தங்களின் வாதத்தை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோனி மியூசிக் லேபிள் நிறுவனம் தொடர்ந்து, இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்திவருவதாகவும் வழக்கின்போது பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளையராஜா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் தொடரும் பிரச்னை :
டியூட் படத்திற்கு முன் இளையராஜா மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில், தனது பாடல் இடம்பெற்றதாக வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகிவந்த குட் பேட் அக்லி படத்திலிருந்து இளையராஜாவின் பாடல்கள் முழுவதும் நீக்கப்பட்டிருந்தது. இன்னும் இந்த வழக்கும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் மைத்ரி மூவி மேக்க்ர்ஸ் தயாரிப்பில் வெளியான டியூட் படத்தின் மீது இளையராஜாவின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.