சிம்புவின் நடிப்பில் வெளியான வல்லவன் படம் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது!
19 Years of Vallavan Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். நடிகர் சிலம்பரசன் எழுதி இயக்கிய படம் வல்லவன். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிலமபரசன் (Actor Silambarasan). இவரது நடிப்பில் கடந்த 21-ம் தேதி அக்டோபர் மாதம் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வல்லவன். இந்தப் படத்தை நடிகர் சிலமபரசன் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரீமா சென், சந்தியா, சந்தானம், சத்யன், பிரேம்ஜி, எஸ்.வி.சேகர், ஜானகி சபேஷ், சங்கர், கார்த்திக் சபேஷ், தாரா சீனிவாசன், வேணு அரவிந்த், தீபா வெங்கட், கொட்டாச்சி, செம்புலி ஜெகன், குகன் சண்முகம், ராஜேந்திரநாத், பாலகுமாரன், டி.ராஜேந்தர், கனல் கண்ணன், மஹத் ராகவேந்திரா, ஜெகன் உட்பட பல நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போல பாடல்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராஜ் லட்சுமி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தேனப்பன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




19 ஆண்டுகளை நிறைவு செய்தது சிம்புவின் வல்லவன்:
கல்லூரியில் மாணவராக இருக்கும் நடிகர் சிம்பு பேராசியராக இருக்கும் நயன்தாராவை காதலிக்கிறார். சிம்புவை விட நயன்தாரவின் வயது அதிகமாக இருப்பதால் காதலை ப்ரேக் செய்துக்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து இவர்களின் காதலை ஒன்று சேர்க்க என்ன எல்லாம் சிலம்பரசன் செய்தார் என்பதே படத்தின் கதை.
இந்தப் படத்தில் ஸ்கூல் காதலில் இருந்த நடிகை ரீமாசென் இருக்கிறார். அவர் சிலம்பரசனை பழிவாங்குவதற்காக என்ன எல்லாம் செய்கிறார். அந்த பிரச்னைகள் அனைத்தையும் அவர் எப்படி சரி செய்கிறார் என்பதே படத்தின் கதை.
Also Read… சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகன்
வல்லவன் படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We are always ready for this one! #Vallavan 🧨❤️🔥#19YearsOfVallavan ➡️https://t.co/8s1wX3ktI8#STR #Yuvan #Nayanthara #ReemaSen pic.twitter.com/17US4y95kE
— Sony Music South India (@SonyMusicSouth) October 21, 2025
Also Read… விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்