வெளியான பரபரப்பு ஆடியோ… நடிகர் அஜ்மல் மீது தொடர்ந்து பாலியல் புகாரளிக்கும் பெண்கள் – என்ன நடந்தது?
Women Against Ajmal Amir: நடிகர் அஜ்மல் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த நடிகர் அஜ்மல், அது போலியானது எனவும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது எனவும் விளக்கமளித்தார்.

தமிழில் அஞ்சாதே, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர் அஜ்மல். மலையாள நடிகரான இவர் தமிழிலும் தனக்கென ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். கடைசியாக விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் பெண்கள் தொடர்ச்சியாக நடிகர் அஜ்மல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜ்மல் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த அஜ்மல், அது தான் இல்லை எனவும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது எனவும் கூறினார். இந்த நிலையில் அவரது பதிவுக்கு பதிலளித்த பெண்கள், அஜ்மல் தங்களுடன் பேசிய ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து, இதுவும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அஜ்மலுக்கு எதிராக குவியும் பாலியர் புகார்கள்
நடிகர் அஜ்மலுக்கு எதிராக அதிகமான பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். அஜ்மல் அமீரின் விளக்க வீடியோவில் தன்னை பற்றி வெளியான வீடியோ செயற்கை நுண்ணறிவு என குறிப்பிட்ட நிலையில், கமெண்ட் பகுதியில், பல பெண்கள் நடிகருக்கு எதிராக முன்வந்தனர். அஜ்மலிடமிருந்து தங்களுக்கும் மோசமான அனுபவம் ஏற்பட்டதாகவும், அவர் தங்களுக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
அவரது வீடியோவில் கமெண்ட் பகுதியில் ஒரு பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஹன்ட் திரைப்படத்தில் தானும் அஜ்மல் அமீரும் ஒன்றாக நடித்ததாகக் கூறுகிறார். அந்தப் பெண், அஜ்மலை அங்கு சந்தித்ததாகவும், பின்னர் அவர் தனக்கு அவர் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறுகிறார். மற்றொரு பெண், 2018 ஆம் ஆண்டு, அவர் தன்னை அழைத்து தனது தாயைக் கேட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். மற்றொரு பெண், தனது நெருங்கிய தோழிகளில் ஒருவருக்கு அஜ்மலுடன் மோசமான அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் அமீர்
View this post on Instagram
இதற்கிடையில், கண்டெண்ட் கிரியேட்டர் முகேஷ் எம் நாயர் அஜ்மல் அமீருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆனால் முகேஷ் எம் நாயர் ஏற்கனவே போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குரல் கிளிப்களைப் பயன்படுத்தி திருத்தப்பட்டதாக அஜ்மல் அமீர் கூறினார். அஜ்மல் அமீர் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாகப் பேசும் ஆடியோ வெளியானது. இது வெறும் கட்டுக் கதை என்று நடிகர் ஒரு விளக்க வீடியோவில் கூறியிருந்தார். அவருக்கு மேலாளர் அல்லது மக்கள் தொடர்பு குழு இல்லை என்றும், அவர் மட்டுமே தனது சமூக ஊடக கணக்குகளைக் கையாள்வதாகவும், தன்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் நடிகர் அஜ்மல் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.