Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Friends: விஜய் – சூர்யா கூட்டணி.. ரீ- ரிலீசாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படம்.. எப்போது?

Friends Movie Re- release: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா. இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுவரை மொத்தமே 2 படங்கள்தான் வெளியாகியிருக்கிறது. அதில் மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ப்ரண்ட்ஸ். இந்த படமானது ரீ ரிலீசாகவுள்ளது. அது எப்போது குறித்து பார்க்கலாம்.

Friends: விஜய் – சூர்யா கூட்டணி.. ரீ- ரிலீசாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படம்.. எப்போது?
ப்ரண்ட்ஸ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Oct 2025 10:52 AM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து நண்பர்களாகவே இருந்து வருபவர்கள் தளபதி விஜய் (Thalapathy Vijay ) மற்றும் சூர்யா (Suriya). இவர்கள் இருவரும் தங்களின் சினிமாவின் ஆரம்ப காலத்திலே இணைந்து சினிமாவில் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுவரை 2 படங்கள் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் வெளியான “நேருக்கு நேர்” (Nerukku Ner) என்ற படத்தின் மூலமாகத்தான் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்தார். இந்த படத்தில் தளபதி விஜயும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா. இந்த படம் இவர்களுக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்திருந்தது. இதை அடுத்து இவர்கள் இவருவரும் இணைந்து நடித்திருந்த படம்தான் ப்ரண்ட்ஸ் (Friends). இந்த படமானது மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீ மேக்காகும்.

இப்படத்தை இயக்குநர் சித்திக் (Siddique) இயக்கியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு இப்படமானது திரையரங்குகளில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகும் மீண்டும் ரீ ரிலீஸாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே… 10 வருடங்களை கடந்தது நானும் ரௌடிதான் படம்!

ப்ரண்ட்ஸ் திரைப்படம் ரீ- ரிலீசாகுவது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

இந்த ப்ரண்ட்ஸ் திரைப்படமானது சுமார் 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படமது 4கே தரத்தில் மாற்றியமைக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகிறதாம். இந்த ப்ரண்ட்ஸ் திரைப்படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

இந்த படம் 24 ஆண்டுகளுக்கும் முன்பே வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீசாகும் நிலையில், சூர்யா மற்றும் தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படமானது நிச்சயமாக சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரண்ட்ஸ் திரைப்படம் :

இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க, நடிகர்கள் தேவயானி, வடிவேலு, விஜயலட்சுமி, ரமேஷ் கண்ணா, ராதா ரவி, ஸ்ரீமன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த படமானது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.