தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே… 10 வருடங்களை கடந்தது நானும் ரௌடிதான் படம்!
10 Years Of Naanum Rowdy Dhaan: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் நானும் ரௌடி தான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் நானும் ரௌடிதான். இந்தப் படம் கடந்த 21-ம் தேதி அக்டோபர் மாதம் 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா (Actress Nayanthara) நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சூர்யா சேதுபதி, அனிகா சுரேந்திரன், ராதிகா சரத்குமார், ஆர்ஜே பாலாஜி, ராஜேந்திரன், அழகம் பெருமாள், ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், மன்சூர் அலி கான், ஆர்.என்.ஆர்.மனோகர், மீனாட்சி, ஆர்.பார்த்திபன், ஆத்மா பேட்ரிக் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்து இருந்தது.
Also Read… ஷூட்டிங் ஓவர்… அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட பராசக்தி படக்குழு




திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்தது நானும் ரௌடி தான்:
தந்தையை காணவில்லை என்று தேடும் நயன்தாரா எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்திக்கிறார். விஜய் சேதுபதிக்கு நடிகை நயன்தாராவை பார்த்த உடனே காதல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவருடன் இணைந்து அவரது அப்பாவை தேட உதவி வருகிறார். இந்த நிலையில் இந்த தேடலில் நயன்தாராவின் தந்தை உயிரிழந்ததை விஜய் சேதுபதி அறிந்துகொள்கிறார்.
அதனைப் எப்படி நயன்தாராவிடம் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது தனதையை கொலை செய்தவரை பழிவாங்க நினைக்கிறார். அதனை விஜய் சேதுபதி எப்படி சமாளித்து அவரை பாதுகாக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ்!