Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கீர்த்தி சுரேஷ் முதல் நாக சைதன்யா வரை.. 2025ல் தல தீபாவளியை கொண்டாடும் பிரபலங்கள்!

Thalai Deepavali 2025: தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் கடந்த 2024ம் ஆண்டு இறுதி மற்றும் 2025 ஆண்டில் இதுவரை பல்வேறு பிரபலங்கள் திருமணம் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த் 2025ம் ஆண்டில் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யாரெல்லாம் தெரியுமா?. அவர்களின் விவரங்களை பார்க்கலாம்.

கீர்த்தி சுரேஷ் முதல் நாக சைதன்யா வரை.. 2025ல் தல தீபாவளியை கொண்டாடும் பிரபலங்கள்!
பிரபலங்களின் தல தீபாவளிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2025 19:56 PM IST

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில்: தென்னிந்தியாவில் முன்னணி நாயகியாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது காதலரான ஆண்டனி தட்டில் (Antony Thattil) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்தே காதலித்துவரும் நிலையில், தங்களின் 15 வருட காதலை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் திருமணமாக இணைத்துள்ளனர். அந்த வகையில், இந்த 2025ம் ஆண்டில் தீபாவளி இவர்கள் இருவருக்கும் தல தீபாவளியாகும். நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில், அவ்வப்போது புகைப்படங்களையும் பகிர்ந்துவருகிறார். மேலும் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டி தீபாவளியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் தம்பதியினர் தங்களில் முதல் தீபாவளியான தல தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.

இதையும் படிங்க: எட்டு திசையெங்கும் பரவும் பைசன் மீதான அன்பிற்கு நன்றி – மாரி செல்வராஜ்

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆன்டனி தட்டில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு :

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா :

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க நடிகராக இருந்துவருபவர் நாக சைதன்யா (Naga Chaitanya). இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவர் தனது நீண்ட நாள் காதலியான சோபிதா துலிபாலவை (Sobitha Dulipala) 2வது திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க: எனக்கு அந்த நடிகர் ரொம்ப பிடிக்கும்… அவர் கூட நடிக்க ஆசை- நடிகை ருக்மிணி வசந்த் ஓபன் டாக்!

நடிகை சோபிதா துலிபாலா தமிழில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பட தொகுப்பில் ரவி மோகனின் ஜோடியாக வானதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடி இந்த 2025ம் ஆண்டில் தங்களின் முதல் தீபாவளியான தல தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

நாக சைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Sobhita Dhulipala (@sobhitad)

சாக்ஷி அகர்வால் மற்றும் நவ்நீத் :

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal). இவர் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தை அடுத்ததாக தமிழில் தொடர்ந்து படங்களிலும் நடித்துவருகிறார்.

இவர் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதியில் தனது நீண்டநாள் காதலரான நவநீத் (Navneet) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகள் மிகவும் சந்தோஷமாக தங்களின் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் இவர்கள் புதுமண தம்பதிகளாக தல தீபாவளியை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன் மற்றும் லவ்ல் தவான்:

கோலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவந்தவர் ரம்யா பாண்டியன் (Ramya Pandian). இவர் குக்வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2024ம் ஆனது நவம்பர் இறுதியில் யோகா பயிற்சியாளரும், பிரபல தொழிலதிபருமான லவ்ல் தவான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்நபதிகள் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், இந்த் 2025 ஆண்டு தீபாவளியில் தங்களின் முதல் தல தீபாவளியை கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.