Dude Movie: டியூட் பட வசூல் சாதனை… ஹாட்ரிக் வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன்!
Dude Movie Collection: கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நாயகனாக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் டியூட். இந்த படமானது 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் மொழியில் இயக்குநராக நுழைந்து, தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 3வது வெளியாகியுள்ள படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் நிலையில் முன்னணி நாயகியாக மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹூரன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த படமானது அதிரடி காமெடி, ஆக்ஷ்ன், காதல் மற்றும் எமோஷனல் என மாறுபட்ட கதைக்களத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி 6 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் சுமார் ரூ 100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்
டியூட் படத்தின் வசூல் விவரம் குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு
thank you @pradeeponelife bro @MythriOfficial.
thank you audience and universe. grateful #Dude#Righttolove pic.twitter.com/HXscV94XsY— Keerthiswaran (@Keerthiswaran_) October 23, 2025
ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தமே 3 திரைப்படங்கள்தான் வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான லவ் டுடே என்ற படத்தை பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்திருந்தார். அந்த படமும் எதிர்பாராத வரவேற்பை பெற்று மொத்தமாக சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இரண்டாவதாக நடித்திருந்த படம்தான் டிராகன். இந்த படமானது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், இந்த படமானது சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
இதையும் படிங்க : டியூட் பட விமர்சனம்… சக்ஸஸ் மீட்டில் வெளிப்படையாக பேசிய பிரதீப் ரங்கநாதன்!
இந்த படங்களை தொடர்ந்து, இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் இவரின் நடித்திருந்த படம்தான் டியூட். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகியிருந்த நிலையில், வெறும் 6 நாடுகளில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நடிப்பில் இதுவரை வெளியான 3 படங்களுமே சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2025ம் ஆண்டில் மட்டுமே இரு படங்கள் வெளியான நிலையில், இந்த 2 படங்களும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.