உத்தரப் பிரதேசம் காஜியாபாதில் மூன்று சிறுமிகளின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக கூறப்படும் மூன்று சகோதரிகளின் தந்தை சேதன் குமார், அவர்கள் விளையாடிய ஒரு விளையாட்டில் இவ்வளவு ஆபத்தான டாஸ்க்குகள் இருப்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மகள்கள் அடிக்கடி கொரியா செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அந்த விளையாட்டு இவ்வளவு ஆபத்தானது என்பதை நான் அறியவில்லை. போலீஸ் அவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்த பிறகே இதைப் பற்றி தெரிந்தது என்று அவர் வேதனையுடன் கூறினார்.