Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வீடியோ சாங்!

Yen Paattan Saami Varum Video Song | நடிகர் தனுஷின் இட்லி கடை படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து என் பாட்டன் சாமி வரும் பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வீடியோ சாங்!
என் பாட்டன் சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2025 22:07 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இட்லி கடை. ஃபேமிலி ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தை நடிகர் தனுஷ் (Actor Dhanush) எழுதி இயக்கியதுடன் அவரே நாயகனாகவும் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ், பி.சமுத்திரக்கனி, நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், ஆர்.பார்த்திபன், வடிவுக்கரசி, இளவரசு, ஆடுகளம் நரேன், கீதா கைலாசம், பிரிஜிடா சாகா, இந்துமதி மணிகண்டன் ஆகியோர் இந்தப் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 29-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

என் பாட்டன் சாமி வீடியோ பாடல் வெளியானது:

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இட்லி கடை படத்தில் வெளியான என் பாட்டன் சாமி வீடியோ பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலின் வீடியோ பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் பாடலின் வரிகளை தனுஷ் எழுதி இருந்த நிலையில் பாடலை ஆண்டனி தாசன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!

இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!