வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ
Actor Ajith Kumar: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் அஜித் குமார் செல்ஃபி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் பலர் நடிகர் அஜித் குமாரை வைத்து படங்களை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமராவதி படத்தில் தொடங்கிய நாயகன் வாழ்க்கை தற்போது குட் பேட் அக்லி படம் வரை தொடர்ந்து வெற்றியை அளித்து வருகிறது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். உலக அளவில் நடிகர் அஜித் குமாருக்கு ரசிகர்கள் பல கோடிபேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி கார் ரேசிலும் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித் குமார். படங்களில் நடிப்பது கார் ரேஸ் என இரண்டையும் ஒரே நேரத்தில் கவனித்து வருகிறார் நடிகர் அஜித் குமார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் அஜித் குமார்.




வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோளை செய்துகொடுத்த அஜித்:
சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் அஜித் குமார் கணக்கு எதுவும் வைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக நடிகர் அஜித் குமார் சென்று இருந்தார்.
அப்போது வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் நடிகர் அஜித் குமாரிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உடனே நடிகர் அஜித் குமார் சிரித்துக்கொண்டே அவரின் கையில் இருந்த போனை வாங்கி ரசிகருடன் இணைந்து செல்ஃபி எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பைசன் படத்திற்காக மாரி செல்வராஜிற்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்
இணையத்தில் கவனம் பெறும் அஜித் குமாரின் வீடியோ:
When a fan said he has hearing & speech disability, #Ajithkumar himself took the phone from him and captured a selfie..❣️ pic.twitter.com/DBCNO6I8xg
— Laxmi Kanth (@iammoviebuff007) October 28, 2025
Also Read… மகாராஜா படத்தில் நடிக்க தேர்வானது இப்படிதான் – நடிகர் நட்டி நடராஜன் ஓபன் டாக்