Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பைசன் படத்திற்காக மாரி செல்வராஜிற்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

Actress nupama Parameswaran : மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பைசன் படத்திற்காக மாரி செல்வராஜிற்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்
பைசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Oct 2025 18:02 PM IST

மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிரேமம். இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் நடித்து இருந்தனர். அதில் ஒரு நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் நடிகை அனுபமா பரமேசுவரன் (Actress Anupama Parameswaran). மலையாள சினிமாவில் இவர் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கொடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை அனுபமா பரமேசுவரன்.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக அனுபமா பரமேசுவரன் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தள்ளிப்போகாதே, சைரன் மற்றும் ட்ராகன் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழில் நடிகை அனுபமா பரமேசுவரன் சமீபத்தில் நடித்து வெளியான பைசன் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மாரி செல்வராஜிற்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேசுவரன்:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனா நடித்த இந்த பைசன் காலமாடன் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் ராணி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை அனுபமா பரமேசுவரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாகவது, இது மாரி செல்வராஜின் மேஜிக், உங்களுடைய கிட்டானின் ராணியாக என்னை மாற்றியதற்கு நன்றி. பைசன் படத்திற்கு எப்போது என் மனதில் ஒரு இடம் இருக்கும் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் கனி – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!

இணையத்தில் கவனம் பெறும் அனுபமா பரமேசுவரனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்? வைரலாகும் தகவல்