உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான வைரஸ் படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்!
Virus Movie: மலையாள சினிமாவில் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து பலப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்த வைரஸ் படம் எந்த ஓடிடியில் காணக் கிடைக்கின்றது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வைரஸ். இந்தப் படத்தில் நடிகர்கள் குஞ்சாக்கோ போபன், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், பார்வதி திருவோத்து, ரேவதி, பூர்ணிமா இந்திரஜித், ரஹ்மான், ஸ்ரீநாத் பாசி, ஆசிப் அலி, மடோனா செபாஸ்டியன், பசில் ஜோசப், சௌபின் ஷாஹிர், ஜோஜு ஜார்ஜ், ரம்யா நம்பீசன், தர்ஷனா ராஜேந்திரன், உன்னிமய பிரசாத், ரீமா கல்லிங்கல், ஷரபுதீன், ஜினு ஜோசப், லுக்மான் அவரன், ஹரிஸ் சலீம், இந்திரன், ஜகாரியா முகமது, சாவித்திரி ஸ்ரீதரன், திலீஷ் போத்தன், ஸ்ரீகாந்த் முரளி, சுதீஷ், செந்தில் கிருஷ்ணா, பினு பப்பு, சஜிதா மடத்தில், சரசா பாலுச்சேரி, அம்பிகா ராவ், திவ்யா கோபிநாத், ஜீனத், லியோனா லிஷோய், ஷெபின் பென்சன், ஸ்ரீதேவி உன்னி, நீரஜா ராஜேந்திரன், ஜாலி சிராயத், தீபா தாமஸ், வைஷாக் சங்கர், கோட்டயம் ரமேஷ், நிலம்பூர் ஆயிஷா, கோழிக்கோடு ஜெயராஜ், வெட்டுக்கிளி பிரகாஷ், திலீஷ் நாயர், ப்ரீத்தி நம்பியார், ஆன் சலீம், அஞ்சலி, நௌஷாத் அலி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஆஷிக் அபு இந்தப் படத்தை இயக்கி இருந்த நிலையில் முஹ்சின் பராரி மற்றும் சுஹாஸ்-ஷர்பு ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதியுள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஓபிஎம் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஆஷிக் அபு மற்றும் ரீமா கல்லிங்கல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் – கே.எஸ்.ரவிக்குமார்!




மலையாள சினிமாவில் வெளியான வைரஸ் படத்தின் கதை என்ன?
இந்திய சினிமாவில் பல உண்மைச் சம்பவங்களை வைத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி மலையாள சினிமாவில் அதிக அளவில் உண்மைச் சம்பவங்களை வைத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் உண்மைச் சம்பவத்தை வைத்து வெளியான வைரஸ் படம் குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவி மொத்த கேரளாவையும் உழுக்கியது. அதன்படி வௌவால் கடித்ததால் கேரளாவில் ஒரு நபருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அது பரவி ஒட்டுமொத்த கேரளாவையும் உழுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் பரவலை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான வைரஸ் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் தகவல்