Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயின் நடிப்பில் வெளியாகி 14 வருடத்தை நிறைவு செய்கிறது வேலாயுதம் படம்!

14 Years Of Velayudham Movie: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வேலாயுதம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜயின் நடிப்பில் வெளியாகி 14 வருடத்தை நிறைவு செய்கிறது வேலாயுதம் படம்!
வேலாயுதம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2025 15:08 PM IST

நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் கடந்த 26-ம் தேதி அக்டோபர் மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வேலாயுதம். இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா டிசோசா, சந்தானம், சரண்யா மோகன், சூரி, அபிமன்யு சிங், வினீத் குமார், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, இளவரசு, டி.பி.கஜேந்திரன், காதல் தண்டபாணி, வின்சென்ட் அசோகன், பாண்டி, அஜய், ஜுனைத் ஷேக், ராகவ், ராஜேந்திரன், மணிவண்ணன், வீரசமர், ஓ.ஏ.கே.சுந்தர், அஞ்சலி தேவி, சுவாமிநாதன், கிரேன் மனோகர், யோகி பாபு, கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா மனோகர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

14 வருடத்தை நிறைவு செய்தது வேலாயுதம் படம்:

இந்த வேலாயுதம் தனது தங்கையின் மீது அதீத பாசம் உடைய நபராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தனது தங்கையின் திருமணத்திற்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் சென்று திருமணத்திற்கான பொருட்களை வாங்குவதற்காக செல்கிறார். அங்கு சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்னையில் சிக்குகிறார்.

ஒரு பெரிய கடத்தல் கும்பலுக்கு எதிராக விஜய் செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளில் இருந்து எப்படி விஜய் தனது குடும்பதையும் தன்னையும் பாதுகாத்துக்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்களில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ – நெகிழ்ந்த சிலமபரசன்

இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியானது டைஸ் இரே படத்தின் ட்ரெய்லர்!