Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மம்மூட்டியின் பிளாக் அன்ட் வைட் திரில்லர் படம்.. உங்களை நிச்சயம் அறவிடும்.. மிஸ் பண்ணாம பாருங்க!

Mammoottys Horror Thriller Movie: தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் மம்முட்டி. இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.

மம்மூட்டியின் பிளாக் அன்ட் வைட் திரில்லர் படம்.. உங்களை நிச்சயம் அறவிடும்.. மிஸ் பண்ணாம பாருங்க!
மம்முட்டியின் திரில்லர் படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2025 22:33 PM IST

மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகனாக தற்போதுவரை இருந்துவருபவர் மம்மூட்டி (Mammootty). இவரின் நடிப்பில் ஒரு ஆண்டுக்கு 2 படங்கள் வீதம் வெளியாகிவருகிறது. இந்நிலையில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் இதுவரை பல படங்ககள் வெளியாகியிருக்கிறது. அதில் இயக்குநர் மாரி செல்வராஜையே (Mari Selvaraj) பொறாமை படவைத்த திரைப்படம் ஒன்றும் இருக்கிறது. நடிகர் மம்முட்டியின் மாறுபட்ட நடிப்பில், பிளாக் அன்ட் வைட் திரைப்படமாக இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நிறைய சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உறையவைக்கும் காட்சிகள் என மிகவும் வித்தியாசாமான் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிரம்மயுகம் (Bramayugam) திரைபடம்தான் அது.

இந்த படமானது மொத்தமாக 3 நபர்களை சுற்றி நடக்கும் கதையில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் முழுமையாக பிளாக் அன்ட் ஒயிட்டில் தான் இருக்கும். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் மம்முட்டிதான் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் ராகுல் சதாசிவம் இயக்கியுள்ளார். இந்த திகில் நிறைந்த ஹாரர் திரில்லர் படமானது எந்த ஓடிடியில் உள்ளது என்பது பற்றியும் பார்க்கலாம்.

இதையும் படிங்க : மமிதா பைஜுவா இது? இணையத்தில் வைரலாகும் பழைய வீடியோ!

பிரம்மயுகம் படத்தின் கதைக்களம் என்ன?

இந்த பிரம்மயுகம் படமானது, மொத்தத்தில் 3 நபர்களை சுற்றி நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், மற்றும் சித்தார்த் பரதன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையானது ஒரு போரில் இருந்து தப்பித்த நடிகர் அர்ஜுன் அசோக், தனது நண்பனுடன் அடர்ந்த காட்டினுள் மாட்டிக்கொள்கிறார்.

இதையும் படிங்க : பிரித்விராஜ் – பார்வதி நடிப்பில் ஒரு அழகான காதல் கதை… என்னு நின்டே மொய்தீன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

அப்போது யக்ஷி (மோகினி) பேயிடம் தனது நண்பன் மாட்டிக்கொண்டார். பின் அந்த யக்ஷியிடம் இருந்து தப்பித்த அர்ஜுன் அசோகன். காட்டினுள் ஒரு பழமையான வீட்டிற்கு செல்கிறார். அந்த வீட்டில் மம்மூட்டி மற்றும் சித்தார்த் பரதன் இருவரும் இருக்கின்றனர். இதில் மம்முட்டி சாத்தனாக இருக்கிறார். இது அர்ஜுன் அசோகனுக்கு தெரியாது. அவரும் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொள்கிறார். மேலும் அர்ஜுன் அசோகன் மற்றும் சித்தார்த் பரதன் இருவரும் தப்பிக்கிறார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் க்ளைமேக்ஸ்.

பிரம்மயுகம் படம் எந்த ஓடிடியில் உள்ளது?

மம்முட்டியின் இந்த படமானது 2024ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 85 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது. இப்படம் தற்போது “சோனி லிவ்” ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் இருக்கிறது. நிச்சயமாக இப்படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.