இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!
Ustad Hotel: தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஃபீல் குட் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த ஜானரில் மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் குறித்து தற்போது பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் உஸ்தாத் ஹோட்டல். ஃபீல் குட் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் அன்வர் ரஷீத் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு அஞ்சலி மேனன் திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) உடன் இணைந்து நடிகர்கள் திலகன், சித்திக், நித்யா மேனன், மாமுக்கோயா, குஞ்சன், ஜெயபிரகாஷ், அசிம் ஜமால், மணியன் பிள்ளை ராஜு, பிரவீனா, லீனா, மேக்னா நாயர், சிஜா ரோஸ், பகத் மானுவல், ஸ்ரீநாத் பாசி, லிட்டில் ஸ்வயம்ப், ஜினு ஜோசப், பிரேம் பிரகாஷ், ஜோசப் நா பிரகாஷ், சல்பேட் சகோலா, பிரயாகா மலேசன், தி. யூசுப், அவினாஷ் சிவதாஸ் வெட்டியாட்டில், டொமினிகா, அஸ்வதி, சித்தாரா, அரபாத் அன்சாரி, விஷ்ணு விஜயன், டினு தாமஸ் கண்ணூர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உஸ்தாத் ஹோட்டல் படத்தின் கதை என்ன?
பிறந்த உடனே தனது தாயை இழந்த துல்கர் சல்மான் தனது மூத்த சகோதரிகள் மற்றும் தந்தையால் வளர்க்கப்பட்டார். தொடர்ந்து தனது மூத்த சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் முடிந்ததும் அவரது தந்தை வேறு திருமணம் செய்துகொண்டதால் அவர் மீது கோபத்தில் இருப்பார் துல்கர் சல்மான். தனது தந்தையின் விருப்பத்தை மீறி சமையல் கலையைப் படிக்கிறார் துல்கர் சல்மான்.




Also Read… விஷால் – சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் அப்டேட்
இதனால் தந்தை கோபமடைய இந்தியாவில் கேரளாவில் உள்ள தனது தாத்தாவிடம் செல்கிறார் துல்கர் சல்மான். அங்கு அவரது தாத்தா உஸ்தாத் ஹோட்டல் என்ற ஒரு சின்ன ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஹோட்டல் அந்த ஊரிலேயே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது அங்கு வேலை செய்யும் துல்கர் சல்மான் வெளிநாட்டிற்கு சென்று பெரிய செஃப் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் அவரை தன்னுடனே வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் உஸ்தாத் ஹோட்டலால் அருகில் இருக்கும் ஃபை ஸ்டார் ஹோட்டல் வருமானம் பாதிக்கப்படுவதால் அவர்கள் அந்த ஹோட்டலை மூட முயற்சி செய்கிறார்கள். இதனை துல்கர் சல்மான் எப்படி சரி செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஹார்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… டியூட் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்