ஸ்கூல் படிக்கும்போதே துருவ் விக்ரமிற்கு வந்த சினிமா வாய்ப்பு… சூப்பர் ஹிட் படத்திற்கு நோ சொன்ன விக்ரம்!
Actor Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது பைசன் காளமாடன் படம். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பள்ளியில் படிக்கும் போதே கிடைத்த சினிமா வாய்ப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டுவது, உடல் எடையை குறைப்பது என என்னவாக இருந்தாலும் அதனை மெனக்கெட்டு செய்யும் குறைவான நடிகர்களில் இவரும் ஒருவர். சினிமாவில் இவரது அற்பனிப்பை பார்த்து ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பிரமித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபலங்கள் பலர் விக்ரமின் மெனக்கெடல்களைப் பார்த்து தாங்களும் ஒரு படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை போடவேண்டும் என்று நினைப்பது குறித்து பலர் பலப் பேட்டிகளில் பேசி வருவது அனைவரும் அறிந்ததே. இப்படி டெடிக்கேட்டடான ஒரு நடிகரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம். இவர் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இந்தப் படம் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக மகான் படத்தில் நடித்தார் துருவ் விக்ரம். இதில் இவர் நாயகன் இல்லை. இவரது தந்தை தான் நாயகன். அதனால் இந்தப் படம் வெற்றியடைந்தாலும் துருவ் விக்ரமின் நடிப்பு படத்தில் பாதி கூட இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருவ் விக்ரமின் முழு நீல ஒரிஜினல் படமாக தற்போது பைசன் காளமாடன் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பசங்க படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு:
அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பசங்க. இந்தப் படத்தில் பள்ளி குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும். இதில் நடிகர் துருவ் விக்ரமை நடிக்க வைக்க கேட்டதாகவும் அவர் படிக்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை விக்ரம் மறுத்துவிட்டதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். அப்போது துருவ் விக்ரம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… என்னுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது – விஷ்ணு விஷால்
இணையத்தில் கவனம் பெறும் துருவ் விக்ரமின் பேச்சு:
View this post on Instagram