Kaantha : துல்கர் சல்மான் – பாக்யஸ்ரீ போர்ஸின் காந்தா பட ‘கண்மணி நீ’ என்ற பாடல் வெளியானது!
Kanmani Nee Song: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் காந்தா. இப்படத்தில் இருந்து தற்போது கண்மணி நீ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar). கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படமானது மக்களிடையே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் காந்தா (Kaantha). இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியுள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜானு சாந்தர் இசைஅயமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் பனிமலரே என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து 2வது பாடலான “கண்மணி நீ” (Kanmani Nee) என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ‘கருத்த மச்சான் பாடல்’.. அனுமதியின்றி டியூட் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் புகார்!
காந்தா படக்குழு வெளியிட்ட கண்மணி நீ பாடல் பதிவு :
Some songs aren’t just heard, they’re felt! ✨✨🥰#KanmaniNee, a timeless tune from #kaantha is OUT NOW!https://t.co/RUexjZa3JM
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse… pic.twitter.com/5Vv3SWnh0e
— Spirit Media (@SpiritMediaIN) October 22, 2025
துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த காந்தா படமானது கடந்த 2025 செப்டம்பர் 12ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக இருந்தது. அந்த சமயத்தில் துல்கர் சல்மானின் தயாரிப்பில் வெளியான லோகா படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. அதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்திருந்தது.
இதையும் படிங்க: ‘சூப்பர் மாரி சூப்பர்’… பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதியை கடந்த 2025 தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த காந்தா படமானது வரும் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மேலும் மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இன்னும் இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிவருகிற்து.
உண்மை சம்பவத்தைக் கொண்டு உருவான காந்தா?
இந்த காந்தா படமானது 1960ல் நடைபெற்ற உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படம் ஒரு இயக்குநர் மற்றும் நடிகருக்கு இடையேயான மோதல், அதனால் ஏற்பட்ட விளைவு குறித்த கதையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.