Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினி – கமல் இணையும் படம்: முக்கிய அப்டேட் கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

Rajinikanth and Kamal movie: ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிப்பது குறித்து அவர்கள் மகள்களான ஸ்ருதிஹாசன், சவுந்தர்யா ரஜினிகாந்த்தும் பதிலளித்துள்ளனர். 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான் உள்ளிட்ட பல படங்களில் தொடக்கக் காலத்தில் இணைந்து நடித்த இருவரும், தற்போது மீண்டும் இணைந்து நடிக்க தயாராகி வருகின்றனர்.

ரஜினி – கமல் இணையும் படம்: முக்கிய அப்டேட் கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் கமல் ஹாசன்Image Source: social media
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Oct 2025 15:46 PM IST

சென்னை, அக்டோபர் 24: தமிழ் சினிமாவின் பெரும் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் விரைவில் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். தாங்கள் இணைந்து நடிக்க உள்ளதை இருவருமே தனித்தனியாக உறுதி செய்துவிட்டனர். இதற்கான தகவல் வெளிவந்த நாள் முதல், இப்படத்தை இயக்கப்போவது யார், என்ன கதையாக இருக்கும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் போன்ற எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. முதலில் லோகேஷ் கனகராஜ் தான் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்கப்போவதாக உறுதியாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு வேறொரு இயக்குனர் இப்படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் பல இயக்குனர்களிடம் இப்படத்திற்காக கதைக் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பெரிய இயக்குனராக மட்டும் இல்லாமல், இருவருக்கும் ஏற்றவாறு ஸ்கிரின் ஷேரிங் கொண்டதாக கதை இருக்க வேண்டும் என்பதில் இருவரும் மிக உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

Also read: Biggboss 9 Tamil: எல்லை மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. விஜய் சேதுபதிக்கு குவியும் கோரிக்கை!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரண்டு தூண்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி, சினிமா உலகை உலுக்கி வரும் நிலையில், இயக்குநர் யாராக இருப்பார் என்பதே தற்போது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கூலி படத்திற்கு வந்த எதிர்மறை விமர்சனங்களால் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை இயக்குநராகத் தேர்வு செய்வதில் இருந்து பின்வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அத்துடன், இருவரும் இணைந்தால் ரூ.1000 கோடி வசூல் உறுதி என்ற அளவில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். அப்படி என்றால், ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் அளவிற்கான பிரம்மாண்ட படத்தை இயக்கும் திறன் உள்ள இயக்குநர் யார் என்ற கேள்வியே பெரிதும் ஓங்கியுள்ளது.

விருது நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன், செளந்தர்யா:

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், இரு ஜாம்பவான்களன் மகள்காளன செளந்தர்யா ரஜினிகாந்தும், ஸ்ருதிஹாசனும் பங்கேற்றிருந்தனர். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் திரையில் மீண்டும் ஒன்றாக பார்க்க ஆவலாக காத்திருப்பதாக கூறி அந்த படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், நாங்களும் அதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

Also read: சூர்யா 46 படத்தின் இசை குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்… மாஸான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்:

தொடர்ந்து பேசிய செளந்தர்யா ரஜினிகாந்த், இந்த அப்டேட்டை நாங்கள் கூறுவதை விட எங்களது தந்தைகள் (ரஜினி, கமல்) கூறுவதே சரியாக இருக்கும் என்றார். அத்துடன், கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷன்ல் தயாரிப்பின் கீழ், ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும், அது என்ன வகையான படம், கதை போன்றவை விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அதைப்பற்றி விரைவில் தலைவரே (ரஜினி) அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.